Home சினிமா கோலிவுட் விஜய்யின் மாஸ்டர் பிளான்: 31 நாட்களுக்குப் பிறகு ரூ.1.30 கோடி நிதியுதவி!

விஜய்யின் மாஸ்டர் பிளான்: 31 நாட்களுக்குப் பிறகு ரூ.1.30 கோடி நிதியுதவி!

1
337

Thalapathy Vijay Donation; 31 நாட்களுக்குப் பிறகு விஜய் ரூ.1.30 கோடி நிதியுதவி! கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், நடிகர் விஜய் 31 நாட்களுக்குப் பிறகு ரூ.1.30 கோடி நிதியுதவி அளித்துள்ளார்.

நடிகர் விஜய் கொரோனா பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், ரூ.1.30 கோடி நிதியுதவி அளித்துள்ளார்.

கொரோனா வைரஸ்

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

நிதியுதவி: அரசு வேண்டுகோள்

கொரோனா பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், நிதியுதவி அளிக்குமாறு பிரதமர் மோடி மற்றும் தமிழக முதல்வர் ஆகியோர் கேட்டுக் கொண்டனர்.

இது தொடர்பாக கடந்த மார்ச் 27 ஆம் தேதி தமிழக அரசு சார்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டது.

ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி கோரிக்கை

மேலும், கொரோனாவால் சினிமா படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், சினிமா தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும், அவர்களும் நிதியுதவியோ அல்லது பொருளுதவியோ அளிக்க வேண்டும் என்றும் தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் கூட்டமைப்பு தலைவர் (ஃபெப்சி) ஆர்.கே.செல்வமணியும் வேண்டுகோள் வைத்தார்.

இது தொடர்பாக, கடந்த மார்ச் 23 ஆம் தேதி ஆர்.கே.செல்வமணி அறிக்கை வெளியிட்டார்.

பிரபலங்கள் நிதியுதவி:

இதையடுத்து, சினிமா பிரபலங்கள் பலரும் நிதியுதவி அளித்து வந்தனர். அவர்களில் சூர்யா குடும்பத்தினர், அஜித், ரஜினிகாந்த், ராகவா லாரன்ஸ், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், ஹரிஷ் கல்யாண், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், நயன்தாரா, கங்கனா ரணாவத், சூரி, யோகி பாபு, பாண்டிராஜ் என்று பலரும் நிதியுதவியும், பொருளுதவியும் அளித்துள்ளனர்.

31 நாட்கள்: ஒரு மாத காலத்திற்கு பிறகு விஜய் நிதியுதவி

ஆர்.கே.செல்வமணி அறிக்கை வெளியிட்டு இன்றுடன் 31 நாட்கள் ஆன நிலையில், தளபதி விஜய் கொரோனா பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், ரூ.1.30 கோடி நிதியுதவி அளித்துள்ளார்.

பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம்,

தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம்,

கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம்,

கர்நாடக, ஆந்திரா, தெலங்கானா, புதுச்சேரி முதல்வர் நிவாரண நிதிக்கு தலா ரூ. 5 லட்சம், (மொத்தமாக ரூ.20 லட்சம்),

பெஃப்சி தொழிலாளர்களுக்கு ரூ.25 லட்சம் என்று நிதியுதவி அளித்துள்ளார். இதுதவிர தனது மக்கள் இயக்கத்தின் மூலம் மக்களுக்கு உதவுமாறும் ரசிகர்களை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

விஜய் கூறுவதற்கு முன்பிருந்தே விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக அவரது ரசிகர்கள் ஃபெப்சி தொழிலாளர்களுக்கு அரிசி மூட்டைகளை வழங்கினர். மேலும் பல நிதியுதவி செய்து வருகின்றனர்.

நிதியுதவி ஏன்?

இந்த நிலையில், இதுவரை நிதியுதவியோ அல்லது பொருளுதவியோ வழங்காத விஜய் தற்போது நிதியுதவி அளித்துள்ளது கோலிவுட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாஸ்டர் 5 மொழிகளில் வெளியீடு:

விஜய் நிதியுதவி அளித்ததற்கு முக்கியமான காரணம் மாஸ்டர் 5 மொழிகளில் வெளியாக தகவல் வெளியானது.

ஆம், தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் மாஸ்டர் படம் வெளியாக இருக்கிறது.

இந்த 5 மொழி பேசும் மாநிலங்களை கவரும் வகையில் தான் விஜய் தற்போது நிதியுதவி அளித்துள்ளார்.

ஆம், பிரதமர் (ஹிந்தி), தமிழக முதல்வர் (தமிழ்), புதுச்சேரி (தமிழ்), கேரளா (மலையாளம்), தெலுங்கு (ஆந்திரா, தெலுங்கானா), கர்நாடகா (கன்னடம்) ஆகிய மாநிலங்களை விஜய் கவர் செய்துள்ளார்.

5 மாநில மக்களை கவர்ந்த விஜய்

விஜய்க்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். அப்படியிருக்கும் போது, கொரோனா பாதிப்பு ஏற்பட்ட உடனேயே விஜய் ஓடி வந்து தனது ரசிகர்களுக்கு உதவி செய்திருக்கலாம்.

ஆனால், இன்று வரை அவர் மௌனம் காத்து வந்தார். இது தொடர்பாக விஜய் மீது விமர்சனமும் எழுந்தது.

ஆனால், அதற்கெல்லாம் அசராமல், தற்போது மாஸ்டர் 5 மொழிகளில் வெளியாக உள்ள நிலையில், 5 மாநில மக்களையும் கவரும் வகையில் நிதியுதவி அளித்து வேஷம் போடுகிறார் என்று பலரும் விமர்சனம் வைக்கின்றனர்.

அஜித் நிதியுதவி

இதற்கு முன்னதாக அஜித் 50 லட்சம் ரூபாய் பிரதமர் நிதிக்கும், 50 லட்சம் ரூபாய் தமிழக முதலமைச்சர் நிதிக்கும், 25 லட்சத்தை பெப்சி தொழிலாளர்களுக்கும் அனுப்பி உள்ளார்.

ஒட்டுமொத்தமாக ரூ.1.25 கோடி நிதியுதவி அளித்துள்ளார். அஜித்தை பின்பற்றி தான் தற்போது விஜய்யும் நிதியுதவியும் அளித்துள்ளார்.

அதுவும் கூடுதலாக ரூ.5 லட்சம் சேர்த்து ரூ.1.30 கோடி வரையில் நிதியுதவி அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் நிதியுதவி அளித்ததைத் தொடர்ந்து டுவிட்டரில், #RealHeroThalapathyVIJAY, #Master, #அஜித்தைபின்தொடரும்விஜய் ஆகிய ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகி வருகிறது.

Thalapathy Hs Donated 1.30cr To Corona relief Fund
25 lkhs to PM Relief Fund
50 lkhs To Tn CM Relief fund
10 Lkhs To Kerala cm relief fund
25 lkhs To Fefsi Company
5 Lkhs For Karnataka CM Fund
5 Lakhs To Andhra Cm Fund
5 Lakhs For Telangana Cm fund
5 Lakhs To Pondi

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here