தோனிக்கு வாய்ப்பே இல்லை கவாஸ்கர் வருத்தம், தோனியை இந்திய அணி நிர்வாகம் மீண்டும் அணியில் சேர்க்க வாய்ப்பில்லை என நினைக்கிறேன் என்று சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.
மகேந்திர சிங் தோனி 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்கு பிறகு எட்டு மாதங்களாக அணியில் தேர்வு செய்யாமல் இருந்து வருகிறார்.
வருகிற அக்டோபர் மாதம் 20 ஓவர் உலக கோப்பை தொடங்க உள்ள நிலையில் இந்திய அணியில் விக்கெட் கீப்பிங் சொதப்பி வருகிறது.
ரிஷப் பந்த் விக்கெட் கீப்பிங் சொதப்பி வருகிறார் மற்றும் பேட்டிங்கிலும் பெரிதாக சோபிக்கவில்லை.
அவருக்கு மாற்றாக கேஎல் ராகுல் தற்போது இந்திய அணிக்கு விக்கெட் கீப்பிங் செய்து வருகிறார்.
அவர் பேட்டிங் நன்றாக செய்தாலும் விக்கெட் கீப்பிங் பணிகளில் தோனிக்கு சமமாக ஈடுகொடுக்க முடியவில்லை.
இந்த ஆண்டு இந்திய அணியில் ஊதிய ஒப்பந்த வீரர்கள் பட்டியலில் டோனி பெயர் இடம்பெறவில்லை.
இனி தோனி வாழ்க்கை அவ்வளவுதானா என்று ரசிகர்கள் சிந்தித்து கொண்டிருக்கிறார்கள்.
வருகிற மார்ச் 29ஆம் தேதி ஐபிஎல் போட்டி தொடங்க இருந்த நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் நன்றாக ஆடி அணியில் இடம் பிடித்து விடலாம் என்று எண்ணிய டோனிக்கு ஐபிஎல் தள்ளிப்போனது மிகப்பெரிய பின்னடைவு.
மகேந்திர சிங் தோனி யை குறித்து இந்திய முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவானான சுனில் கவாஸ்கர் கூறியதாவது:
தோனி இந்திய அணியில் மீண்டும் இடம் பிடித்து டி20 உலக கோப்பையில் பங்கேற்க வேண்டும் என்பது ரசிகர்களின் விருப்பம். அதுதான் என்னுடைய விருப்பமும்.
இது இந்திய அணிக்கு மிகப்பெரிய பலம். ஆனால் தற்போதுள்ள சூழ்நிலையில் அவர் அணியில் இடம் பிடிப்பதற்கு வாய்ப்பே இல்லை என்றுதான் நான் நினைக்கிறேன்.
தோனி அணியில் இல்லாமலேயே இந்திய அணி அவரை தள்ளி வைத்து கோலி தலைமையில் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துவிட்டது.
நிர்வாகம் கூட டோனி அணியில் இடம் பிடிப்பதை பற்றி கொஞ்சம்கூட யோசிப்பதாக தெரியவில்லை. எனவே தோனி டி20 உலகக் கோப்பை இடம் பிடிப்பது மிகவும் கடினமே.
டோனி தனது ஓய்வு அறிவிப்பை விளம்பர படுத்த மாட்டார்,அமைதியாக ஓய்வு அறிவித்து விடுவார்.
என்று சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.