தோனி: முடிந்தால் பிடித்துப்பார் ரசிகருடன் ஓடி விளையாடிய தோனி
நேற்று இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பொழுது ஃபீல்டிங் செய்ய களம் இறங்கிய தோனியைக் கட்டிப்பிடிக்க ஓடி வந்த ரசிகரிடம் சிக்காமல் தோனி ஓட ஆரம்பித்து இறுதியில் கட்டியணைத்து ரசிகரை மகிழ்வித்தார்.
நாக்பூர் மைதானத்தில் நேற்று நடந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 250 ரன்களில் ஆட்டம் இழந்தது. சிறப்பாக விளையாடிய கோலி தன்னுடைய 40ஆவது சதத்தை பதிவு செய்தார்.
ஃபீல்டிங் செய்ய இந்திய அணி வரும் பொழுது செக்யூரிட்டிகளை மீறி வழக்கம் போல் தோனி ரசிகர் ஒருவர் ஆடுகளத்திற்குள் நுழைந்தார்.
இதை அறிந்த தோனி, ரசிகரிடம் சிக்காமல் ஓட்டம் பிடித்தது பார்க்கவே வேடிக்கையாக இருந்தது. இறுதியில் ரசிகரிடம் சரணடைந்ததால் ரசிகர் தோனியை கட்டிப்பிடித்து விட்டு சென்று விட்டார்.
இந்த புகைப்படங்களும் வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகின்றது. இதுபோன்று தோனியை தொட பலமுறை அவரது ரசிகர்கள் மைதானத்தில் நுழைவது பழகிப்போன ஒன்று.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, இரண்டு டி-20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகளைக் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை 8 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கதாகும். இதன் மூலம் 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.