தோனியை வீழ்த்துவேன்: ரிஷப்பின் குறும்பு புரமோ வீடியோ
12-வது ஐபிஎல் தொடரின் முதல் போட்டியிலேயே தோனி-கோலி தலைமையிலான அணி மோதிக்கொண்டது.
மிகப்பெரிய போட்டியாக இருக்கும் என எதிர்பார்த்துச் சென்ற ரசிகர்களுக்கு இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியது.
மைதானம் சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமாக இருந்ததால் RCB அணி சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழந்தது. இதனால் தோனியும் பேட்டிங் செய்ய முடியாமல் போனது.
இன்று இரவு 8:00 மணிக்கு CSK vs DC அணிகள் பலப்பரிட்சை நடத்த உள்ளது. இரண்டு அணிகளும் முதல் போட்டியில் வெற்றி பெற்றுவிட்டது.
டெல்லி அணி இந்த முறை வலுவான அணியாக உருவாகியுள்ளது. முக்கியமாக ரிஷப் பண்ட் அதிரடி டெல்லியின் பேட்டிங்கிற்கு வலுசேர்க்கிறது.
இளம் வீரர்களை கொண்டுள்ள டெல்லி கேப்பிட்டல் அணி மூத்த வீரர்களைக் கொண்டுள்ள சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியுடன் மோத உள்ளது.
இளம் வீரர்களின் பலமா? மூத்தவர்களின் அனுபவமா? ஜெயிக்கப்போவது யார் என இப்போட்டியைக் காண இருதரப்பு ரசிகர்களிடமும் ஆவல் அதிகரித்துள்ளது.