கோலியைக் கதறவிட்ட ரசிகர்கள்!
தீவிரவாதத் தாக்குதலால் ஜம்மு காஷ்மீர் நகரில் 45 சிஆர்பிஎஃப் ஜவான்கள் கொல்லப்பட்டனர். இந்நிலையில் நாடே சோகத்திலும் அதிருப்தியிலும் உள்ளது.
இதைக் கொஞ்சமும் பொருட்படுத்தாமல் விராட் கோலி வேறு ஏதோ சம்பந்தம் இல்லாத ட்வீட் போட்டதால் ரசிகர்கள் கோபமடைந்தனர்.
350 கிலோ வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட காரை பேருந்து மீது மோதி வெடிக்கச் செய்ததில் 45 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர்.
38-க்கும் மேற்பட்ட சி.ஆர்.பி.எப் வீரர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
45 சிஆர்பிஎப் வீரர்கள் தீவிரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கி, பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அனைத்து அரசியல் தலைவர்களும், விளையாட்டு வீரர்களும், சினிமா நட்சத்திரங்களும் தாக்குதலுக்கு கடும்கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கிரிக்கெட் வீரர்கள் கம்பீர், சேவாக், முகமது கைப் போன்றவர்களும் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தீவிரவாதத் தாக்குதல் குறித்து எந்தவிதமான கண்டன அறிக்கையும் பதிவிடாமல் அதற்குப் பதிலாக,
இந்திய விளையாட்டு வீரர்களுக்கான விருது குறித்த பதிவையும், வீடியோவையும் வெளியிட்டு ரசிகர்கள் வாக்களிக்கக் கோரி இருந்தார்.
ரசிகர்கள் தங்களுடைய ஆதங்கத்தை வெளியிட்டதால் சிறிது நேரத்தில் சூழ்நிலையை புரிந்து மறுபடி சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு இரங்கல்கள் கேட்கும் வகையில் ட்வீட் செய்தார்.