Home நிகழ்வுகள் இந்தியா அடுத்த கார்கில் போருக்குத் தயாராகிவிட்டது இந்தியா?

அடுத்த கார்கில் போருக்குத் தயாராகிவிட்டது இந்தியா?

449
0
அடுத்த கார்கில் போருக்குத்

அடுத்த கார்கில் போருக்குத் தயாராகிவிட்டது இந்தியா?

ஜம்மு-காஷ்மீரில் நடந்த புல்வாமா தாக்குதலில் 44 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு நாடு முழுவதும் கண்டனங்கள் எழுத்துள்ளது.

எப்படி இந்த தாக்குதல் நடந்தது என சி.ஆர்.பி.எப் படையே குழம்பிப்போய் விட்டது. இருப்பினும் இதற்கு தீவிரவாத அமைப்பு ஒன்று பொறுப்பேற்றுக்கொண்டது.

அந்த தீவிரவாத அமைப்பு பாகிஸ்தானைச் சேர்ந்தது. பாகிஸ்தானுக்கும் இதில் பங்கு உள்ளதற்கான ஆதாரம் உள்ளதாக மத்திய அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி, இதில் சமந்தபட்டவர்கள் அனைவரும் தக்க விலை கொடுக்க நேரிடும். அவர்கள் அனைவரும் தவறு செய்துவிட்டார்கள். இதில் சமந்தப்பட்டவர்களுக்குத் தக்க பதிலடி கொடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த், பொறுத்தது போதும், இந்த காட்டுமிராண்டித்தனமான செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. உயிரிழந்த ஜவான் குடும்பத்தினர் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதுபோன்ற பாஜக நெருங்கிய வட்டாரங்கள் கருத்துகள் அனைத்தையும் ஒப்பிட்டால் இந்தியா அடுத்த கார்கில் போருக்குத் தயாராகிக்கொண்டு உள்ளதோ என எண்ணத் தோன்றுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here