கருஞ்சிறுத்தை முதல் முறையாக கேமராவில் சிக்கியது
சிறுத்தையை அநேக மிருகக்காட்சி சாலையில் பார்த்திருக்க முடியும். ஆனால், ப்ளாக் பேந்தர் என்ற கருஞ்சிறுத்தை இனத்தை சினிமாவில் மட்டுமே பார்த்திருப்பார்கள்.
அப்படி யார் கண்ணிலும் சிக்காத இந்த அரியவகை விலங்கை வில் பர்ராட் என்ற புகைப்பட கலைஞர் படம் பிடித்துள்ளார்.
இதற்குமுன் இதை யார் படம் பிடித்தார்கள் என்று சரியாகத் தெரியவில்லை. கடந்த நூறு வருடங்களில் கருஞ்சிறுத்தை படம் பிடிக்கப்படுவது இதுவே முதல்முறை.
ஒரு சிறுத்தையின் காலடி தடத்தை பின் தொடர்ந்து சென்று நான்கு நாட்கள் காத்திருந்து இந்த கருச்சிறுத்தையைப் படம் பிடித்துள்ளார்.