குஞ்சாலி மரக்கார் அல்லது குன்ஹாலி மரைக்காயர் வரலாறு. மரக்கார் என்பது 16-ஆம் நூற்றாண்டில் கேரளா காலிகட் மன்னர் ஜாமோர், முஸ்லீம் கடற்படைத் தலைவருக்கு வழங்கப்பட்ட பட்டம்.
மரைக்காயர் அல்லது மரக்கார்
மரக்கார் மலையாள மொழி வார்த்தையான மரக்கலம் என்பதிலிருந்து உருவானது. இது மரக்கலத்தின் (கப்பலின்) கேப்டனை குறிக்கிக்கும் சொல்.
ஐரோப்பாவை உருவாக்கும் ஆசியா என்ற புத்தகத்தில் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் டான் லாச் & எட் லெவி, மரக்கார் என்றால் ‘வைஸ்ராய்’ என்று கூறுகிறார்.
1507 முதல் 1600 வரை போர்த்துகீசியர்களுடன் ஜாமோரின் கடற்படைப் போர்களில் நான்கு முக்கிய குஞ்சாலி மரக்கார்கள் இருந்தனர்.
இந்திய கடற்கரையின் முதல் கடற்படை பாதுகாப்பை ஏற்பாடு செய்த பெருமை மரக்கார்களுக்கு உண்டு.
குஞ்சாலி என்பது குடும்பப் பெயர். இவர்களில் இரண்டாம் குஞ்சாலி மரக்கார் அல்லது மரைக்காயர் பிரபலமானவர். இந்தியக் கடற்கரையில் முதல் கடற்படை பாதுகாப்பு தளத்தை உருவாக்கியவர்.
காலிகட்டுக்கு அருகிலுள்ள கோட்டக்கலில் உள்ள இரிங்கலில் உள்ள குஞ்சாலி மரக்காரின் மூதாதையர் வீடு இப்போது ஒரு அருங்காட்சியகமாக பாதுகாக்கப்படுகிறது.
நான்கு முக்கிய குஞ்சாலி மரக்கார்கள்
முதலாம் குஞ்சாலி | குட்டி அஹம்மத் அலி | 1520-1531 |
இரண்டாம் குஞ்சாலி | குஞ்ஞாலி மரைக்காயர் | 1531-1571 |
மூன்றாம் குஞ்சாலி | பட்டு குஞ்ஞாலி | 1531-1571 |
நான்காம் குஞ்சாலி | முஹம்மது அலி | 1595-1600 |
மரக்கார்களின் தோற்றம்
மரக்கார்கள் முதலில் கொச்சி துறைமுகத்தின் முஸ்லீம் கடல் வணிகர்களாக இருந்தனர்.
போர்த்துகீசிய கடற்படைகள் கேரளாவில் உள்ள மலப்புரத்தின் ஒரு பகுதி பொன்னானியை தாக்கியபோது மிகுந்த வீரத்துடன் அவர்களுக்கு எதிராகப் போரிட்டனர்.
இதனால் காலிகட்டின் அரசர் ஜாமோர் தன் படையில் இணைத்து கடற்படையின் அட்மிரல்களாக நியமித்தார்.
1504 ஆம் ஆண்டிலேயே போர்த்துகீசிய ஆதாரங்களின்படி மரக்கார்கள் கேரளாவின் கொச்சி மற்றும் தமிழ்நாட்டின் சோழமண்டல பகுதிகளில் கப்பல்கள் மற்றும் தொழிற்சாலைகள் வைத்திருந்தனர்.
போர்த்துகீசியர்கள் இப்பகுதிகளில் தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதற்க்கு முன்பு மலேசியா முதல் மாலத்தீவு வரை இவர்களுடைய வர்த்தகம் இருந்தது என வரலாற்று ஆராய்ச்சியாளர் (கே.எஸ்.மேத்யூ) தெரிவிக்கிறார்.
இலங்கை, ராமநாதபுரம் மற்றும் கயல்பட்டணம் மரக்கார்களுக்கிடையேயான மிக நீண்ட வரலாற்றுத் தொடர்பு இருந்தது.
அரிசியும், மசாலா பொருள்களும் முக்கியமான வர்த்தக பொருள்கள் என வரலாற்றாசிரியர்கள், ஷேக் ஜைனுதீன் மற்றும் பார்போசா போன்ற வரலாற்று எழுத்தாளர்களால் மேற்கோள்காட்டப்படுகிறது.
போர்த்துகீசிய அடக்குமுறைக்கு எதிராக
போர்த்துகீசியர்கள் ஆரம்பத்தில் 1498-இல் வர்த்தக சலுகைகளைப் பெற முயன்றனர். ஆனால் முஸ்லீம்கள் பாரம்பரியமாகத் துறைமுகங்களில் வியாபாரம் செய்து வந்தனர்.
இதனால், இவர்களுக்கு இடையில் வர்த்தகப்போர் ஆரம்பித்தது. மன்னர் ஜாமோரும் போர்த்துகீசியர்கள் கொச்சியில் வர்த்தகம் செய்வதை விரும்பவில்லை.
இதன் விளைவாக போர்த்துகீசியர்கள் 1503-ஆம் ஆண்டில் தனது பரம எதிரியான கொச்சின் அரசுடன் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்தி ஆட்சியை சீர்குலைக்க முயன்றனர்.
போர்த்துகீசிய படையின் ஆதிக்கத்தைக் கடலில் உணர்ந்த ஜாமோர் தனது கடற்படையை மேம்படுத்தத் தொடங்கினார். இதனால் குஞ்சாலி மரக்காரை பணிக்கு நியமித்தார்.
ஜாமோரினுக்கும் போர்த்துகீசியர்களுக்கும் இடையிலான போர் 16-ஆம் நூற்றாண்டின் இறுதி வரை தொடர்ந்தது, மரைக்கார்கள் மிகத் தீவிரமாகப் போராடி போர்த்துகீசியர்களின் ஆதிக்கத்தைத் தடுத்தனர்.
1598-ஆம் ஆண்டில் போர்த்துகீசியர்கள் அரசர் ஜாமோரினிடம் சமாதான உடன்படிக்கை ஏற்படுத்தி மராக்கார் IV ஆட்சியைக்கைப்பற்ற போகிறார் என பயமுறுத்தி அரசர் ஜாமோர் போர்த்துகீசியர்களுடன் சேர்த்துக்கொண்டு மராக்கார் IV-ஐ தோற்கடித்தனர்.
அவரையும் படைவீரர்கள் 40 பேரையும் கோவாவில் தூக்கிலிடப்பட்டனர். அவரது இறந்த உடல் பனாஜி மற்றும் பத்ரெஸ் கடற்கரைகளில் காட்சிக்கு வைக்கப்பட்டது. அவரது தலை வெட்டி எடுக்கப்பட்டு கேரளா கன்னனூருக்கு அனுப்பப்பட்டது.
உலகில் எல்லா பகுதிகளிலும் கொடுமையான அரசுக்கு எதிராக அன்று முதல் இன்று வரை எந்த விளைவுகளைப் பற்றியும் பயம் இல்லாமல் குஞ்சாலி மரைக்காயர்கள் போராடிக்கொண்டே இருக்கின்றனர்.