Home தொழில்நுட்பம் Top 10 Fitness App 2020: டாப் 10 உடற்பயிற்சி செயலிகள்

Top 10 Fitness App 2020: டாப் 10 உடற்பயிற்சி செயலிகள்

449
0
Top 10 Fitness App 2020 download link

Top 10 Fitness App 2020: டாப் 10 உடற்பயிற்சி செயலிகள். உடலை பிட்டாக வைப்பதற்கு சிறந்த ஃபிட்னஸ் செயலிகள் தேர்வுசெய்து கீழே டவுன்லோட் லிங்க் இணைத்துள்ளோம்.

இணையம் வளர்ந்த இன்றைய காலக்கட்டத்தில் எதை எடுத்தாலும் செயலிகள். எந்தவொரு துறையாக இருந்தாலும் காலை நாம் எழுந்ததிலிருந்து இரவு உறங்கும் வரை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு செயலிகள் உள்ளன.

நாம் நம் உடலை பிட்டாக வைக்க உதவும் 2020-ன் 10 சிறந்த ஃபிட்னஸ் செயலிகள் உங்களுக்காக தேர்வு செய்து எழுதியுள்ளோம்.

Top 10 Fitness App 2020: டாப் 10 உடற்பயிற்சி செயலிகள்

10. Keelo 

இந்த செயலியின் சிறப்பு நாம் வீட்டிலிருந்தே ஜிம்க்கு செல்லாமல் உடற்பயிற்சி செய்வதற்கு முன்னுரிமை கொடுக்கும்.

நம்முடைய உடல் எடையை வைத்து தீவிர உடற்பயிற்சி செய்ய நிறைய டிப்ஸ் வழங்கும். இதில் பிரிமியம் அண்ட் ஃப்ரீ இரண்டுமே உள்ளது.

DOWNLOAD

9. Workit

தீவிர உடற்பயிற்சியும் பளுதூக்கும் பயிற்சியும் சேர்ந்த கலவையாக இந்த செயலி தயாரிக்கப்பட்டுள்ளது. உங்களுடைய உடலின் முன்னேற்றத்தை படிப்படியாக கணிக்கும் வகையில் இதன் யு‌ஐ உள்ளது.

இதன் ப்ரீ வெர்ஷனில் நீங்கள் அனைத்தையும் பெறலாம். பிரிமியம் வெர்ஷனில் பி‌எம்‌ஐ கணிக்கும் அம்சம் இன்னும் பல அம்சங்கள் அமைந்துள்ளன.

DOWNLOAD

8. Nike Training Club 

டாப் 10 உடற்பயிற்சி செயலிகள் டவுன்லோட் லிங்க்

தலைசிறந்த ஃபிட்னஸ் வல்லுனர்களால் எடுக்கப்பட உடற்பயிற்சி காணொளிகள் மற்றும் குறிப்புகள் இதில் இடம் பெற்றுள்ளன. இதில் நீங்கள் அனைத்து விதமான உடற்பயிற்சி சேவைகளையும் பெறலாம்.

DOWNLOAD

7. FitNotes 

இந்த செயலியை நீங்கள் இணையம் இல்லாமலும் உபயோகம் செய்யலாம். இதில் எந்த வித பெர்சனல் இன்ஃபர்மேஷன் இமெயில், மொபைல் எண் போன்றவை கேட்காது.

இதிலும் ப்ரீ மற்றும் பிரிமியம் வெர்ஷன்கள் உள்ளன.

DOWNLOAD

6. Sweat

உங்களுக்கு உடற்பயிற்சி குறிப்புகளுடன் உணவு அட்டவணையும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. உங்களின் தேவைக்கேற்ப நீங்கள் உடல் எடைய குறைத்து கூட்டிக் கொள்ளலாம்.

DOWNLOAD

5.Sleep Cycle

நாம் வாழும் ஓய்வு இல்லாத இந்த மெஷின் வாழ்க்கையில் நம்மில் அதிக நபருக்கு தூக்கம் சரியாக வருவதில்லை.

அதனால் நேரத்திற்கு தூங்குவதற்கும் எவ்வளவு நேரம் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தோம் என்பதையும் இது குறிப்பிடும். தூக்கத்தில் தொந்தரவு இருப்பவர்கள் இந்த செயலியை முயற்சி செய்து பார்க்கலாம்.

DOWNLOAD 

4. Home Workout – No Equipment

இந்த செயலியின் பெயரை படித்ததும் உங்களுக்கு தெரிந்து விடும் இது எதில் சிறந்து விளங்குகிறது என்று. உங்கள் உடலே உங்களுக்கு உடற்பயிற்சி உபகரணங்கள்.

நீங்கள் ஜிம்க்கு போகத் தேவையில்லை. வீட்டிலிருந்தே உடலை பிட் ஆக வைப்பது எப்படி என உங்களுக்கு உதவி செய்யும்.

DOWNLOAD  

3. Runtastic 

சிறந்த ஃபிட்னஸ் செயலிகள்இது அடிடாஸ் நிறுவனத்தின் சொந்த ஃபிட்னஸ் செயலியாகும். இதில் எந்த அளவுக்கு நீங்கள் தண்ணீர் குடிக்க வேண்டும், உடற்பயிற்சி குறிப்புகள் மற்றும் உணவு பழக்கங்கள் அனைத்துமே இதில் இருக்கும்.

இதில் பிரிமியம் வெர்ஷனில் நீங்க அனைத்து சேவையும் பெறலாம். ப்ரீ வெர்ஷனில் ஓரளவு உங்களுக்கு தேவையான சேவைகள் கிடைக்கும்.

DOWNLOAD  

2. MyFitnessPal 

கடந்த பதிமூன்று வருடமாக ஃபிட்னஸில் சிறந்த விளங்குகிறது. இதில் உடற்பயிற்சிக்கு இணையாக உணவுப் பழக்கங்களுக்கும் அதிக முக்கியத்தும் கொடுக்கப்பட்டுள்ளது.

உண்மையில் உணவு பழக்கம் என்பது மிகவும் முக்கியம் உடலை கட்டமைப்பாக வைப்பதற்கு இதனால்தான் மை ஃபிட்னஸ் பல் செயலி தலைசிறந்ததாக விளங்குகிறது.

DOWNLOAD 

1. Google Fit 

இதில் அனைத்து சேவையுமே உங்களுக்கு பிரீயாக கிடைக்கும். நம்மில் பல பேர் எதுவாக இருந்தாலும் இலவசத்தையே விரும்புகிறோம்.

மேலும் இதில் மற்ற ஃபிட்னஸ் செயலிகளுக்கும் இதற்கும் இருக்கும் தொடர்பு விளக்கி கூறப்பட்டிருக்கும். உங்களின் தேவைக்கு ஏற்ப உங்களுக்கு பிற ஃபிட்னஸ் கருவிகள் பரிந்துரைக்கப்படும்.

DOWNLOAD

Previous articleஉக்ரைன் விமான நிலையம்: 2 ஏவுகணைகள் வீசிய விவகாரம்
Next articleகுஞ்சாலி மரக்கார்: குன்ஹாலி மரைக்காயர் வரலாறு
நாகேஷ்வரன் எடிட்டர், MrPuyal.com. மிஸ்டர் புயல் இணையதளத்தின் தூண் என இவரைக் குறிப்பிடலாம். இவருடைய புனைப்பெயர் ஹஸ்ட்லர். எறும்பு போன்று எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பதால் நண்பர்களால் ஹஸ்ட்லர் என அழைக்கப்படுகிறார். தொடர்புக்கு கீழுள்ள சமூக வலைதளங்களை அணுகவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here