Home Latest News Tamil Happy Birthday Rohit; ரோஹித் ஷர்மா, எம்‌எஸ் தோனியின் வாழ்வை மாற்றிய கிரிக்கெட் முடிவுகள் சிக்சர்...

Happy Birthday Rohit; ரோஹித் ஷர்மா, எம்‌எஸ் தோனியின் வாழ்வை மாற்றிய கிரிக்கெட் முடிவுகள் சிக்சர் மழையும் இரட்டை சதங்களும்

375
0

Happy Birthday Rohit; ரோஹித் ஷர்மா, எம்‌எஸ் தோனியின் வாழ்வை மாற்றிய கிரிக்கெட் முடிவுகள் சிக்சர் மழையும் இரட்டை சதங்களும். ரோஹித் ஷர்மா கிரிக்கெட் பயணம்

சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு நாள் போட்டியில் மூன்று இரட்டை சதங்களும் அதிகபட்ச ஸ்கோரான 264 மற்றும் 4 முறை ஐ‌பி‌எல் கோப்பை என வென்ற திறமையும் நுணுக்கங்களும் கொண்ட வீரர் தான் ரோஹித் சர்மா.

ரோஹித் சர்மாவின் கிரிக்கெட் வாழக்கையை பார்க்கும் பொழுது அதை இரண்டாக பிரிக்கலாம். ரோஹித் மிடில் ஆர்டர் ஆடிய பொழுது அவர் இருக்கும் இடமே யாருக்கும் தெரியாது.

அவரை அணியில் சேர்ப்பதற்காக சச்சின், சேவாக் மற்றும் கம்பீர் ஆகியோரை சுழற்சி முறையில் களமிறக்கிய முன்னாள் கேப்டன் தோனி பெரிய விமர்சனத்தில் சிக்கினார்.

பிறகு இப்படியே சென்ற ரோஹித் சர்மாவின் கிரிக்கெட் பயணம் அவரின் திறமைக்கேற்ற வரவேற்பு கிடைக்கவில்லையே எனலாம்.

2013ஆம் ஆண்டு திடீரென யாருமே எதிர்பாக்காத தருணத்தில் மினி உலகக்கோப்பை தொடரில் ரோஹித் சர்மாவை ஒபேணிங்க் செய்ய தோனி பரிந்துரைத்தார்.

அன்று தொடங்கிய ரோஹித் சர்மாவின் ரன் வேட்டை இன்று வரை ராஜ ஆட்டம் ஆடி வருகிறது. அதன் பிறகு அவரின் உண்மை திறமை உலகிற்கு தெரிந்தது.

இன்றைக்கும் ரோஹித் ஷர்மா தன்னுடைய கிரிக்கெட் பயணத்தில் தோனியின் அந்த ஆதரவும் சரியான நேரத்தில் எடுத்த முடிவும் என் பயணத்தின் திசையைம் மாற்றி என்னை நிரூபிக்க ஒரு வழியாக அமைந்தது.

இதனால் தான் தோனியை அனைவரும் திறைமையை கண்டறிவதில் வல்லவர் என கூறுவார்கள். இதன் பிறகே மூன்று இரட்டை சதங்கள் அடித்தார். 25க்கும் மேற்பட்ட சதங்கள் ஒரு நாள் போட்டிகளில் அடித்துள்ளார்.

அவரின் மிகத்தெளிவான டைமிங் ஷாட் மற்றும் ஆற்றாலை வீணடிக்காமல் அடிக்கும் சிக்சர்களும் அவரின் நீண்ட நேர இன்னிங்ஸ்களுக்கு காரணமாகும்.

மற்ற வீரர்கள் அடிக்கும் சிக்சர்காலை பார்க்கையில் எடுத்துக்காட்டாக தோனியை எடுத்தால் அவர் அடிக்கும் பொழுது அவரின் பேட் சுழற்றும் வேகம், தோனியின் ஹேண்ட் பவர் ஆகியை நாம் பார்க்கலாம்.

ரோஹித் பேட் வேகமாக சுழற்றினாலும் டைமிங் மிக அருமையாக பண்ணக்கூடியவர் அதனால் தான் எளிதாக அதிக பௌண்டரீகள் அவரால் அடிக்க இயலுகிறது.

இதனால் தான் எளிதாக அதிக ரன்கள் அடித்து இன்று விரத் கோலிக்கு அடுத்த இடத்தில் இருக்கிறார். 2019ஆம் ஆண்டின் சிறந்த ஒரு நாள் வீரர். உலகக்கோப்பை தொடரில் 5 சதங்கள் என அவரின் சிறந்த ஆண்டாக அமைந்தது.

Previous articleசென்னை, மதுரை, கோவை ஆகிய நகரங்களில் 4 நாட்கள் முழு ஊரடங்கு நீடிப்பு கிடையாது: தமிழக அரசு
Next articleகதிரவனை வணங்குவோம் கொரோனாவை கொல்வோம்; இந்தோனேசியர்கள்
நாகேஷ்வரன் எடிட்டர், MrPuyal.com. மிஸ்டர் புயல் இணையதளத்தின் தூண் என இவரைக் குறிப்பிடலாம். இவருடைய புனைப்பெயர் ஹஸ்ட்லர். எறும்பு போன்று எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பதால் நண்பர்களால் ஹஸ்ட்லர் என அழைக்கப்படுகிறார். தொடர்புக்கு கீழுள்ள சமூக வலைதளங்களை அணுகவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here