சச்சின் டெண்டுல்கரைப் பற்றி எழுதிக்கொண்டே போகலாம் , அந்த அளவிற்கு அசத்தியுள்ளார் அவர். அவர் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்களை குவிந்ததால் மட்டுமே இவ்வளவு புகழ்ப் பெற்றுவிட்டார் என்று நினைத்தால் அது தவறு. அவர் கிரிக்கெட் விளையாட துவங்கிய காலத்தில் அவரைவிட அதிக ரன்கள் குவித்தவர்கள் கூட இவர் அளவு புகழ் பெறவில்லை. கிட்டத்தட்ட அவர் ஓய்வு பெற்று 7 ஆண்டுகள் ஆகப்போகிறது ஆனால் இன்றும் #HapyBirthdaySachin, #GodOfCricket, #Sachin Tendulkar. ஆகிய ஹாஷ் டாகுகள் தான் இன்றும் ட்ரெண்டிங் .
சச்சின் அவர்களின் நன்னடத்தை தான் அவர் இன்றளவும் புகழின் உச்சியில் இருக்க காரணம். அவர் அடித்த ரன்களை வேறு ஒரு வீரர் கடந்தாலும் , சச்சினின் புகழ் மங்காது.
ரசிகர்களை அவர் மகிழ்விக்க ஒரு சிறிய புன்னகையுடன் கூடிய கை அசைவு போதும் அரங்கமே “Sachin… சச்சின்…” என்று ஆர்ப்பரிக்கும். இன்றும் அவரது பிரிவு உபசார உறையை கேட்டு கண்கள் கசிவோர் பலர்.
விளையாட்டில் எந்த அளவிற்கு ஈடுபாட்டுடன் இருந்தாரோ , அதே போல தான் அதன் விதிகளையும் கடைப்பிடித்தார். ஒரே ஒரு முறை கூட நடுவர்களின் தீர்ப்பிற்கு எதிராக எந்த சலனமும் செய்ததில்லை.
மட்டையில் பந்து பட்டது என்று தெரிந்தால் நடுவரின் முடிவிற்காக காத்திராமல் பெவிலியன் நோக்கி நடக்கத் துவங்கி விடுவார். அவர் இருந்த நிலைக்கு அவர் நினைத்திருந்தால் பல பந்தா காமித்திருக்கலாம் , இருந்தும் என்றும் சம நிலை தவறாமல் இருந்தார்.
யாரையும் குறைகூறியது கிடையாது, எந்த சர்ச்சையிலும் சிக்கியது கிடையாது. சிறந்த ஜென்டில் மேனாகவே விளையாடி முடித்தார்.
அவரது 33 வது வயது முதலே கடுமையான எதிர்மறை விமர்சனங்களை நேர்மறையாக எதிர்த்து வருகிறார் ! அந்த நேர்மறை மற்றும் நேர்மைதான் சச்சின் புகழ் இன்றும் மங்காமல் இருக்க காரணமென்றால் அது மிகை இல்லை.
சா.ரா