தமிழனை சீண்டிய ஹர்பஜன் சிங்
வருகிற மார்ச் 29ம் தேதி தொடங்க உள்ள 13வது ஐபிஎல் போட்டிக்கு பல அணி வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்
சென்னையில் தோனி, ரெய்னா, அம்பதி ராயுடு, பியூஸ் சாவ்லா, ஹர்பஜன்சிங் போன்ற வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்
தல தோனி பதிவு செய்ய பார்ப்பதற்கு ரசிகர்கள் கூட்டம் மைதானத்திற்கு தினமும் குவிந்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் தென்னாபிரிக்கா உடன் மோத உள்ள இந்திய அணி 15 பேர் கொண்ட வீரர்களை அறிவித்தது. அதில் 20 வயது இளம் வீரரான வாஷிங்டன் சுந்தர் இடம் பிடித்திருந்தார்.
ஹர்பஜன் சிங் நேற்று தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி ஒன்றை அளித்தார். அதில் அவர் கூறியது ‘ அடையாளம் காண இந்திய அணி மறுப்பது ஏன்? சலஜ் சக்சேனா, அக்ஷய் வகாரே போன்ற வீரர்களை புறக்கணித்து ஏன்?
பந்தை சுழற்ற கூட தெரியாதா வாஷிங்டன் சுந்தரை மீண்டும் மீண்டும் அணியில் சேர்ப்பது தவறான ஒன்று, சல்ஜ் சக்சேனா சுந்தரை விஞ பேட்டிங் மற்றம் பந்துவீச்சில் சிறப்பாகவே செயல்படுகிறார்’ என கூறியுள்ளார்.
வாசிங்டன் சுந்தர் தமிழகத்தைச் சேர்ந்தவர், 17 வயதில் இந்திய அணியில் இடம் பிடித்து 2017 ஆம் ஆண்டு அறிமுகமாகி விளையாடி வருகிறார்.
வாஷிங்டன் சுந்தர் தான் முடிந்தளவு சிறப்பாகவே விளையாடி வருகிறார் அவரை ஹர்பஜன் தற்போது சீண்டி உள்ளார்.