Home விளையாட்டு Ind vs SA : டாஸ் கூட போட முடியாத நிலைமை-தர்மசாலாவில் தர்மசங்கடம்

Ind vs SA : டாஸ் கூட போட முடியாத நிலைமை-தர்மசாலாவில் தர்மசங்கடம்

303
0

மார்ச்.12: இந்தியா சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்கா அணி மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது.

அதன்படி நேற்று இமாசல பிரதேச சர்வதேச மைதானத்தில் முதல் போட்டி நடைபெற இருந்தது.

கடந்த இரண்டு நாட்களாக அங்கு மழை பெய்து வந்தது, ஆட்டம் நடைபெறுமா என்கிற சந்தேகம் இருந்தது.

நேற்று காலை சிறிது நேரம் மழை விட்டது. ஆட்டம் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் போட்டி ஆரம்பம் ஆகும் முன்பு மீண்டும் மழை குறுக்கிட்டு ஆட்டத்தை தடுத்தது.

தொடர்ந்து மழை பெயத்ததால் நடுவர்கள் காத்திருந்து காத்திருந்து பார்த்து விட்டு டாஸ் கூட முடியாத நிலைமை எனபதால் ஆட்டத்தை கைவிடப்பட்டது என்று அறிவித்தார்கள்.

நியூசிலாந்திற்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்தியா ஒயிட்வாஷ் ஆனது, ஆகையால் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் இந்தியா இருந்தது.

மழை குறுக்கிட்டதால் இந்தியா வீரர்கள் மட்டும் இல்லை ரசிகர்களும் வேதனை அடைந்தார்கள்.
தென் ஆப்பிரிக்கா அணி ஆஸ்திரேலியாவை வெள்ளை அடித்து வீட்டுக்கு அனுப்பிய சந்தோசத்தில் இந்தியா வந்தார்கள், இந்தியாவை ஒரு கை பார்த்துவிடலாம் என்று.

ஆனால் மழை வந்தது இரண்டு கனவுகளையும் கலைத்து விட்டது.

அடுத்த போட்டி வருகிற மார்ச் 15 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை லக்னோவில் நடைபெறகிறது.

கொரனோ தெற்று பரவி வருவதால் இரண்டாவது போட்டியில் தீவிர கண்காணிப்பில் இந்தியா கிரிக்கெட் சங்கம் நடத்தவுள்ளது.

வீரர்களின் நலனை கருத்தில் கொண்டு வெளியில் வீரர்களை அனுப்ப இருதரப்பு நிர்வாகமும் மறுத்து வருகிறது.

Previous articleWorld Sleep Day 2020 Theme; உலக தூக்க தினம் 2020 தீம்
Next articleவெட்டுக்கிளி-யிடம் இருந்து விவசாயத்தை காக்க 1000 கோடி தேவையாம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here