Home விளையாட்டு இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடர் தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு

இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடர் தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு

740
0

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள தென்ஆப்பிரிக்கா அணி மார்ச் 7ஆம் தேதி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா எதிரான 3 ஒருநாள் போட்டி மார்ச் 12 ஆம் தேதியிலிருந்து தென்னாபிரிக்க அணி விளையாடவுள்ளது.

நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியும் தென் ஆப்பிரிக்கா  அணி வென்று ஆஸ்திரேலியாவை ஒயிட் வாஷ் செய்தது.

இதே உற்சாகத்துடன் இந்தியா வருகை தரவுள்ள தென்னாபிரிக்க வலுவான அணியாக வர உள்ளது

மலன் மற்றும் ஸமட்ஸ்

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் சதமடித்த ஜெனமேன் மலன் இடம்பிடித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவிக்கு எதிராக கடைசி போட்டியில் 84 ரன்கள் மட்டும் இரண்டு விக்கெட் வீழ்த்திய ஆல்ரவுண்டரான ஜெ.ஜெ. ஸமட்ஸ் இந்த அணியில் இடம் பிடித்துள்ளார்.

டீகாக் கேப்டன்

கடந்த மாதம் பாப் டு பிளெஸிஸ் தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார். புதிய கேப்டனாக குயின்டன் டீ காக் நியமிக்கப்பட்டார்.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி 20 போட்டி தொடரை இழந்தாலும், ஒரு நாள் தொடரை ஒயிட்வாஷ் செய்து வென்றார் குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுடன் விளையாட டீகாக் தலைமையில் 15 பேர் கொண்ட தென் ஆப்பிரிக்கா அணி அறிவிக்கப்பட்டது.

தென் ஆப்பிரிக்கா அணி விபரம்
SOUTH AFRICA SQUAD

பவுமா, வான்டர் டுஸன், டு பிளெஸிஸ், புளுகுவாயோ, டீ காக், மில்லர், ஜானமென் மலன், ஸமட்ஸ்,  ஜார்ஜ் லின்டி,  வேறினே, கிளாஸன், லுங்கி நெகிடி, சிப்பம்லா, ஹேன்ரீக்ஸ், நார்ஜே, மகாராஜ்

போட்டிகள்

முதல் போட்டி தர்மசாலா, இரண்டாவது போட்டி லக்னோ மற்றும் முன்றாவது கடைசி போட்டி கொல்கத்தாவிலும் நடைபெறவுள்ளது.
அனைத்து போட்டியும் பகலிரவு ஆட்டமாக நடைபெறும்.

Previous articleWalter: வால்டர் ஸ்னீக் பீக் வெளியீடு!
Next articleமுன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ப.தா.முத்து காலமானார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here