Home விளையாட்டு பழிக்குப்பழி: மொத்தமாக திருப்பிக்கொடுத்த இந்தியா

பழிக்குப்பழி: மொத்தமாக திருப்பிக்கொடுத்த இந்தியா

706
0
பழிக்குப்பழி IND vs AUS 2nd ODI 2020

பழிக்குப்பழி: அரைச்சதம், சதம், விக்கெட் இழப்பின்றி வெற்றி. ஒரே போட்டியில் மொத்தமாக ஆஸ்திரேலிய அணிக்கு திருப்பிக்கொடுத்தது இந்தியா. IND vs AUS 2nd ODI 2020.

IND vs AUS 2nd ODI 2020

இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று ராஜ்கோட்டில் உள்ள சௌராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேசன் ஸ்டேடியத்தில் நடைபெற்றது.

முன்னதாக, முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியை விக்கெட் இழப்பின்றி ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

மூன்று ஒருநாள் போட்டி கொண்ட தொடர். எனவே, இந்திய அணி வென்றே தீரவேண்டும் என்ற கட்டாயத்தில் களம் இறங்கியது.

அரைச்சதம் – சதம் வீண்

இந்திய அணியின் தொடக்க வீரர்கள்  ரோஹித்-தாவான் ஜோடி சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். ஆனால் ரோஹித் 42 ரன்களிலும், தவான் 96 ரன்களிலும் அவுட்டாகினர்.

ஒருவருக்கு அரைச்சதம் மிஸ்ஸிங். இன்னொருவருக்கு நான்கு ரன்களில் ஒரு சதம் வீணாகியது.

விராட்-ராகுல் ஜோடி

அதன்பிறகு களம் இறங்கிய ஷ்ரேயாஸ் ஐய்யர் நிலைத்து ஆடவில்லை. 7 ரன்களில் நடையைக் காட்டினார். விராட் கோலியுடன் கே‌.எல்.ராகுல் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 40-வது ஓவர் வரை நிலைத்து ஆடியது.

மீண்டும் ஜாம்பா பந்தில் அவுட் 

விராட்கோலியின் விக்கெட்டை இன்னொருமுறை எடுத்துவிட்டார் ஜாம்பா. 78 ரன்கள் எடுத்த நிலையில் ஜாம்பா பந்தை நேராக சிக்சருக்கு தூக்கியடித்தார்.

அப்போது ஸ்டார்க் சிக்சர் எல்லையில் நின்று தாவி பிடித்து அதை மற்றொரு வீரருக்கு தூக்கிவீசிவிட்டு எல்லைக்குள் சென்றார். இன்னொரு வீரர் பிடித்ததால் அது அவுட்டாக மாறிவிட்டது.

விராட் கோலியை தொடர்ந்து 2 ரன்களில் மனீஷ் பாண்டேவும் நடையைக் கட்டினார். 300 ரன்களை நெருக்கிக் கொண்டிருந்தபோது அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தது.

இதனால் இந்தியா 300 ரன்களை கடக்குமா என சந்தேகம் எழுந்தது. இருப்பினும் ராகுல்-ஜடேஜா ஜோடி கை கோர்த்தனர்.

தோனியாக மாறிய ராகுல்

INDvsAUS இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கே.எல். ராகுல்

இந்திய அணியின் மிடில் ஆர்டர், நீண்ட நாட்களாக தோனி இல்லாமல் தடுமாறி வந்தது. நம்பிக்கை தரும் அளவிற்கு எந்த வீரரும் நிலைத்து ஆடியது கிடையாது.

ஆனால் ராகுல், நேற்று விளையாடிய போட்டியில் தோனி போன்று பொறுப்புடன் விளையாடி இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

ஸ்டார்க் ஓவரை நாலாபக்கமும் விரட்டினார். இதனால் இந்திய அணி 49 ஓவருக்கு 335 ரன்களை எட்டியது. ஆனால் கடைசி ஓவரில் 5 ரன்கள் மட்டுமே கிடைத்தது.

இப்போட்டி மூலம் கே.எல்.ராகுல் சர்வதேச ஒருநாள் போட்டியில் 1000 ரன்களை கடந்தார். கடைசி ஓவரில் வீணாக ரன் ஓடிய ராகுலின் விக்கெட் பறிபோனது.

இறுதியாக 50 ஓவர் முடிவில் இந்தியா 340 ரன்கள் எடுத்தது.  ஜடேஜா 20, ஷமி 1 ரன்னுடன் களத்தில் இருந்தனர்.

 

பழிக்குப்பழி வாங்கியது இந்தியா

341 ரன்கள் எடுத்தால் வெற்றி என ஆஸ்திரேலிய ஓப்பனர் வார்னர்-பிஞ்ச் களம் இறங்கினர். இந்தமுறை  சீக்கிரமே வார்னர் விக்கெட்டை சமி கைபற்றினார்.

12 ரன்கள் எடுத்தபோது ஷமி பந்தை அடிக்க முயன்று பாண்டேவிடம் கேட்ச் ஆனார். 33 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா வீசிய பந்தை பிஞ்ச் அடிக்க முயன்றார்.

ஆனால், பந்து பேட்டில் படாமல் ராகுலிடம் சென்றது. கண்ணிமைக்கும் நேரத்தில் ஸ்டெம்பிங்க் செய்தார். ராகுல் பேட்டிங் மட்டுமல்லாமல் கீப்பிங்கிலும் தோனி போன்று அசத்தினார்.

மூன்றாவது அம்பயர் நீண்ட நேரம் ரீப்ளே செய்து அவுட் கொடுத்தார். மயிரிழையில் கிரீசில் கால்வைக்க முடியாமல் அவுட் ஆனார் பிஞ்ச்.

முதலாவது போட்டியில் அவுட்டாகாமல் விளையாடிய ஆஸ்திரேலிய துவக்கவீரர்களை எளிதாக வீழ்த்தினர் இந்திய பவுலர்கள்.

அரைச்சதம் – சதம் பழிக்குப்பழி

மர்னஸ் 46 ரன்கள் இருந்தபோது அரைச்சதம் அடிக்க விடாமல் ரவீந்திர ஜடேஜா ஓவரில் ஷமி கேட்ச் பிடித்து அவுட் செய்தார்.

அதேபோல் நீண்ட நேரமாக ஆஸ்திரேயாவை வெற்றி பெறவைக்கும் நம்பிக்கை நட்சத்திரமாக விளையாடிய ஸ்மித் 98 ரன்கள் எடுத்தபோது குல்திப் சூழலில் சுருண்டார்.

90 ரன்கள் கடந்த நிலையில் பதற்றதுடனே ஆடினார் ஸ்மித். குல்திப் பந்தை தூக்கியடிக்க நினைத்து பால் எட்ச்சாகி ஸ்டெம்பில் பட்டு அவுட் ஆனார்.

ரோஹித்-தவான் போன்றே இவர்கள் இருவரையும் அரைச்சதம்-சதம் அடிக்க விடாமல் இந்திய வீரர்கள் அவுட் செய்து பழிதீர்த்துக்கொண்டனர்.

ஆல்அவுட் பழிதீர்ப்பு

முதலாவது போட்டியில் ஒரு விக்கெட்டை கூட கைப்பற்ற முடியாமல் திணறிய இந்திய பவுலர்கள் இரண்டாவது போட்டியில் ஆல்அவுட் செய்து கெத்து காட்டினார்.

49-வது ஓவரை ஷமி விசும்போது கடைசி விக்கெட் வேண்டும் என விராட் கூற, லூஸ் பால் போட்டார் ஷமி. ஆனால் ரிஷார்ட்சன் பந்தை சிக்சர் பவுண்டரி என பறக்க விட்டார்.

இதனால் ஆஸ்திரேலியா 300 ரன்களை கடந்தது. 9 ஓவர்கள் வீசிய பும்ரா 32 ரன்கள் மட்டுமே கொடுத்தார். ஆனால் ஒரு விக்கெட் கூட விழவில்லை.

இறுதி ஓவரை வீசிய பும்ரா முதல் பந்திலேயே ஜம்பாவிற்கு பவுன்சர் போட்டார். அதை அடிக்க முயன்றார் ஜாம்பா ஆனால் கே.எல்.ராகுல் கேட்ச் பிடித்து ஆல்அவுட் செய்தார்.

49.1 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்த ஆஸ்திரேலியா 304 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது.

Previous articleINDvsAUS: தோனியாக மாறிய கே.எல். ராகுல்
Next articleஒரு விரல் புரட்சி என்னும் விந்தை எப்படி இருக்கவேண்டும்?
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here