INDWvsSLW-WWCT20I; இலங்கையை வீழ்த்தியது இந்தியா
பிப்.29: 7வது இருபது ஓவர் மகளிர் உலகக்கோப்பை ஆஸ்திரேலியாவில் கடந்த 21ஆம் தேதி தொடங்கியது.
பத்து அணிகள் பங்கு பெற்று இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பிரிவு-ஏ வில் ஆஸ்திரேலியா, இந்தியா, வங்கதேசம், இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளும்,
பிரிவு – பி யில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, மேற்கு இந்திய தீவுகள், தாய்லாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளும் விளையாடுகிறது.
இன்று பிரிவு ‘ஏ’ யில் நடைபெற்ற 13வது லீக் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை INDWvsSLW-WWCT20I மோதியது.
இந்தியா மகளிர் பேட்டிங்
டாஸ் வென்ற இலங்கை மகளிர் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது இலங்கை அணி இந்தியாவின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் விக்கெட்டுகளை இழந்தது.
தடுமாறியது 20 ஓவர் முடிவில் இலங்கை அணி 9 விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் எடுத்தது.அதிகபட்சமாக கேப்டன் அதப்பட்டு 33 ரன்கள் சேர்த்தார், ஸ்ரீவர்த்தினே 13 ரண்களும், மடாவி 12 ரன்களும் சேர்த்தனர்.
கவிஷா தில்காரி 25 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார். இந்திய தரப்பில் ராதா யாதவ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார், கெய்க்வாட் 2 விக்கெட்டும், தீப்தி சர்மா, ஷிகா பாண்டே மற்றும் பூனம் யாதவ் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்கள்.
மீண்டும் ஷாபாலி அதிரடி
114 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் 14.4 ஓவர்களில் இலங்கையை வீழ்த்தியது.
தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ஷாபாலி வர்மா 34 பந்துகளில் 47 ரன்கள் சேர்த்து ரன் அவுட் ஆகி வெளியேறினார்.
மந்தனா 17 ரன்கள், கேப்டன் கவுர் 15 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்கள். ரோட்ரிக்ஸ் மற்றும் தீப்தி சர்மா தலா 15 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இலங்கை தரப்பில் பிரபதானே கட்டுக்கோப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 13 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார், இவரைத் தவிர மற்ற வீராங்கனைகள் சொல்லிக்கொள்ளும்படி பந்துவீசவில்லை.
இந்த வெற்றியின் மூலம் இந்த உலக கோப்பையில் இந்தியா தொடர்ச்சியாக பெறும் நான்காவது வெற்றியாகும். புள்ளி பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. ஏற்கனவே இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.
ராதா யாதவ் ஆட்டநாயகன்
4 ஓவர்கள் பந்துவீசி 23 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்திய ராதா யாதவ் ஆட்டநாயகன் விருதை வென்றார். கடந்த நான்கு போட்டிகளிலும் பந்துவீச்சாளர்களே இந்தியாவின் வெற்றிக்கு முன்னிலை வகிக்கிறார்கள்.
இலங்கை மகளிர் அணி வருகிற மார்ச் 2-ஆம் தேதி மெல்போர்னில் இந்திய நேரப்படி காலை 5.30 மணிக்கு வங்கதேச மகளிர் அணியை எதிர்கொள்கிறது. இரு அணிகளுமே ஏற்கனவே அரையிறுதி வாய்ப்பை இழந்தது குறிப்பிடத்தக்கது
உலககோப்பை புள்ளி பட்டியல்
பிரிவு ஏ
TEAM P W L P
IND : 4 4 0 8
AUS : 3 2 1 4
NZ : 3 2 1 4
SL : 3 0 3 0
BAN : 2 0 2 0
பிரிவு பி
TEAM P W L P
RSA : 2 2 0 4
ENG : 3 2 1 4
PAK : 2 1 1 2
WI : 2 1 1 0
THAI : 3 0 3 0