Home விளையாட்டு இந்தியில் தான் பேசவேண்டும் – ரோகித் சர்மா

இந்தியில் தான் பேசவேண்டும் – ரோகித் சர்மா

212
0

டுவிட்டரில் “நாங்கள் இந்தியர்கள் இந்தியில்தான் பேச பேசுவோம்” என்று சர்ச்சையான கருத்தை இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக 21 நாள் இந்திய மக்கள் பிரதமர் அறிவித்தபடி ஊரடங்கு உத்தரவில் இருந்து வருகிறார்கள்.

கொரோனாவால் உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில் அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளில் பெரிதாகும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

தற்போது இந்திய பிரதமர் மோடி அவர்கள் நாட்டு மக்களிடையே உங்களால் முடிந்த நிதியை தாருங்கள் என்று கேட்டுக்கொண்டார்.

பல தொழிலதிபர்கள், பல நடிகர்களும், இதற்கு பல கோடிகளை நிதியாக கொடுத்தார்கள்.

கிரிக்கெட் வீரர்கள் சச்சின், கங்குலி, கோலி, ரெய்னா, மிதாலிராஜ், பூனம் யாதவ், ரோகித் சர்மா போன்றவர்களும் பல லட்சங்களை கொடுத்தார்கள்.

இந்த தொற்று காரணமாக எந்த விளையாட்டுப் போட்டிகளும் இந்தியாவில் தற்போது நடைபெறவில்லை.

இதனால் பல வீரர்கள் தங்களுடைய குடும்பங்களுடன் நேரத்தை செலவழித்து வருகிறார்கள்.

இருந்தபோதும் சமூகவலைதளங்களில் ரசிகர்களுடன் உரையாடி நேரத்தை செலவிடுகிறார்கள்.

ரோகித் சர்மா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேரலை செய்து அரட்டை அடிக்கும் வந்தார்கள். இதை ரசிகர்கள் அனைவரும் கண்டு ரசித்தார்கள்.

இதில் இருவரும் தங்கள் அனுபவம் இந்திய அணி மற்றும் ஐபிஎல் போட்டியில் போன்றவற்றை பகிர்ந்தார்கள்.

இருவருமே மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடுபவர்கள். இவர்கள் இருவரும் நேரலையில் இந்தியில் பேசி உள்ளார்கள்.

இந்தி தெரியாத ஒரு ரசிகர் ரோஹித் சர்மாவிடம் கோரிக்கையாக “நீங்கள் பேசுவது எனக்கு புரியவில்லை ஆங்கிலத்தில் பேசினால் புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு பதில் தரும் விதமாக ரோகித்சர்மா

“நாங்கள் இந்தியர்கள் இந்தியில் தான் பேசுவோம் டிவியில் வேண்டுமானால் ஆங்கிலத்தில் பேசலாம் ஆனால் இங்கு பேச வேண்டிய கட்டாயம் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

இந்த கருத்து தற்போது ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் சர்ச்சை வெடித்துள்ளது. இந்தியர்கள் இந்தி மட்டும் தான் பேச வேண்டுமா பழமொழிகளை கொண்டதுதான் இந்த இந்தியா.

ரோகித் சர்மாவிற்கு அனைத்து மாநிலங்களிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். ரோஹித் ஆங்கிலத்தில் பேசுவது கட்டாயமில்லை.

ஆனால் இந்தியர்கள் இந்தியில் தான் பேசுவோம் என்பது தற்போது சர்ச்சைக்குள்ளாகி உள்ளது.

Previous article4 வருடங்களுக்குப் பிறகு தாறுமாறா வியூஸ் வாங்கிய உன் மேல ஒரு கண்ணு பாடல்!
Next articleஹலோவில் டிரெண்டாகும் தமிழ் சினிமாவின் ராணி யார்: நீங்களும் வாக்களியுங்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here