Home விளையாட்டு INDvsAUS: தோனியாக மாறிய கே.எல். ராகுல்

INDvsAUS: தோனியாக மாறிய கே.எல். ராகுல்

689
2
INDvsAUS இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கே.எல். ராகுல்

INDvsAUS: தோனியாக மாறிய கே.எல்.ராகுல். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியில் கே.எல்.ராகுல் சிறப்பாக விளையாடினார்.

INDvsAUS 2020

இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. முதலாவது ஒருநாள் போட்டியில் இந்தியாவை விக்கெட் இழப்பின்றி ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

எனவே இந்திய அணி இப்போட்டியில் வெல்ல வேண்டிய காட்டாயத்தில் உள்ளது. தொடக்க வீரர்களாக களம் இறங்கிய ரோஹித்-தாவான் ஜோடி சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர்.

அரை-சதம் மிஸ்ஸிங் 

42 ரன்கள் எடுத்தபோது ரோஹித் சர்மா, சாம்பா ஓவரில் எல்பிடபில்யு அவுட் ஆனார். இதனால் அவரால் அரைச்சதத்தை பூர்த்தி செய்ய முடியவில்லை.

அதன்பிறகு இணைந்த விராட்-தவான் ஜோடி இந்திய அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தியது.

96 ரன்கள் எடுத்தபோது ஷிகர் தவான் துரதிஷ்டவசமாக கேன் ரிச்சர்ட்சன் வீசிய பந்தை தூக்கியடிக்க நினைத்து ஸ்டார்க்கிடம் கேட்ச் ஆனார்.

இதை ஆஸ்திரேலிய வீரர்களே எதிர்பார்க்கவில்லை. ஒருவர் அரைசதம் கடக்கவிடாமல் அவுட் செய்தனர். மற்றொருவரை சதம் அடிக்கும் தருவாயில் அவுட் செய்தனர்.

விராட்-ராகுல் ஜோடி

அதன்பிறகு களம் இறங்கிய ஷ்ரேயாஸ் ஐய்யர் நிலைத்து ஆடவில்லை 7 ரன்களில் நடையைக் காட்டினார். விராட்கோலியுடன் கே‌எல்ராகுல் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 40-வது ஓவர் வரை நிலைத்து ஆடியது.

ஜாம்பா மேஜிக்

விராட்கோலியின் விக்கெட்டை இன்னொருமுறை எடுத்துவிட்டார் ஜாம்பா. 78 ரன்கள் எடுத்த நிலையில் ஜாம்பா பந்தை நேராக சிக்சருக்கு தூக்கியடித்தார்.

அப்போது ஸ்டார்க் சிக்சர் எல்லையில் நின்று தாவி பிடித்து அதை மற்றொரு வீரருக்கு தூக்கிவீசிவிட்டு எல்லைக்குள் சென்றார். இன்னொரு வீரர் பிடித்ததால் அது அவுட்டாக மாறிவிட்டது.

ராகுல்-ஜடேஜா ஜோடி 

விராட் கோலியை தொடர்ந்து 2 ரன்களில் மனீஷ் பாண்டேவும் நடையைக் கட்டினார். 300 ரன்களை நெருக்கிக் கொண்டிருந்த போது அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தது.

இதனால் இந்தியா 300 ரன்களை கடக்குமா என சந்தேகம் எழுந்தது. இருப்பினும் ராகுல்-ஜடேஜா ஜோடி கை கோர்த்தனர்.

தோனியாக மாறிய ராகுல்

இந்திய அணியின் மிடில் ஆர்டர் நீண்ட நாட்களாக தோனி இல்லாமல் தடுமாறி வந்தது. நம்பிக்கை தரும் அளவிற்கு எந்த வீரரும் நிலைத்து ஆடியது கிடையாது.

ஆனால் ராகுல் இன்று விளையாடிய போட்டியில் தோனி போன்று பொறுப்புடன் விளையாடி இந்திய் அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

ஸ்டார்க் ஓவரை நாலாபக்கமும் விரட்டினார். இதனால் இந்திய அணி 49 ஓவருக்கு 335 ரன்களை எட்டியது. ஆனால் கடைசி ஓவரில் 5 ரன்கள் மட்டுமே கிடைத்தது.

ராகுல் இப்போட்டியில் 1000 ரன்களை கடந்தார். வீணாக ரன் ஓடி ராகுல் விக்கெட் பறிபோனது. இறுதியாக 50 ஓவர் முடிவில் இந்தியா 340 ரன்கள் எடுத்தது.  ஜடேஜா 20, ஷமி 1 ரன்னுடன் களத்தில் இருந்தனர்.

 

ஷமி ஓவர் வார்னர் காலி

341 ரன்கள் எடுத்தால் வெற்றி என ஆஸ்திரேலியா ஓப்பனர் வார்னர்-பிஞ்ச் களம் இறங்கினர். இந்தமுறை  சீக்கிரமே வார்னர் விக்கெட்டை சமி கைபற்றினார்.

12 ரன்கள் எடுத்தபோது ஷமி பந்தை அடிக்க முயன்று பாண்டேவிடம் கேட்ச் ஆனார். 33 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா வீசிய பந்தை பிஞ்ச் அடிக்க முயன்றார்.

மயிரிழையில் பிஞ்ச் அவுட்

ஆனால் பந்து பேட்டில் படாமல் ராகுலிடம் சென்றது. கண்ணிமைக்கும் நேரத்தில் ஸ்டெம்பிங்க் செய்தார். பேட்டிங் மட்டுமல்லாமல் கீப்பிங்கிலும் தோனி போன்று அசத்தினார்.

மூன்றாவது அம்பயர் நீண்ட நேரம் ரீப்ளே செய்து அவுட் கொடுத்தார். மயிரிழையில் கிரீசில் கால்வைக்க முடியாமல் அவுட் ஆனார் பிஞ்ச்.

26 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா 150 ரன்கள் எடுத்து சற்று இந்தியாவிற்கு அச்சம் கொடுத்தவாரே விளையாடி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here