இந்தியா ஆஸ்திரேலியா INDvsAUS வாழ்வா சாவா இறுதி ஒரு நாள் போட்டி
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, இரண்டு டி-20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகளைக் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
டி20 தொடரில் சிறப்பாக செயல்பட்ட ஆஸ்திரேலியா அணி தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது. கோலி தலைமையில் முதல் முறையாக இந்திய அணி தொடரை இந்திய மண்ணில் தோற்றது குறிப்பிடத்தக்கதாகும்.
ஒரு நாள் போட்டியில் நல்ல தொடக்கம் கொடுத்த இந்திய அணி முதல் இரண்டு போட்டிகளை அசத்தலாக வென்றது. மூன்றாவது போட்டியில் சுதாரித்துக் கொண்ட ஆஸ்திரேலியா அணி முதல் வெற்றியயைப் பெற்றது.
தொடர்ந்து சிறப்பாக விளையாடி நான்காவது போட்டியிலும் 354 ரன்களை சேஸ் செய்து அபார வெற்றி பெற்றது.
நான்காவது போட்டியில் இந்திய அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு இருந்தன. இதில் தோனி, சமி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருந்தது.
தோனி இல்லாததால் தான் ஸ்பின் பௌலர்கள் சிறப்பாக செயல்பட வில்லை என்று பலர் கூறுகின்றனர்.
மேலும் பாண்ட் கேட்ச் மற்றும் ஸ்டம்பிங்கை தவற விட்டது அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
இறுதி ஒரு நாள் போட்டி நாளை டெல்லியில் நடைபெறவுள்ளது. தொடரைக் கைப்பற்றியே ஆக வேண்டும் என்று இரு அணி வீரர்களும் முனைப்புடன் செயல்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.