இந்து என்பதால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தன்னை ஒதுக்கிவிட்டது என பாகிஸ்தான் அணியின் முன்னாள் பவுலர் தானிஷ் கனேரியா தெரிவித்துள்ளார்.
ஸ்பார்ட் பிக்ஸிங் குற்றத்தில் சிக்கி வாழ்நாள் தடை பெற்றவர் பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் தானிஷ் கனேரியா.
இந்து மதம்
கனேரியா குறித்து சில நாட்கள் முன் சோயிப் அக்தர் தன்னுடைய யூடியூப் சேனலில் பகீர் குற்றச்சாட்டு ஒன்றை வைத்தார்.
கனேரியா இந்து என்பதால் அவருடன் சக வீரர்கள் உணவை பகிர்ந்துகொள்ள மாட்டார்கள். அவர் மத அடிப்படையில் ஓரங்கட்டப்பட்டார் என ஒரு பரப்பு குற்றச்சாட்டை பாகிஸ்தான் அணி மீது அக்தர் சுமத்தினார்.
சோயப் வார்த்தைகளே சான்று
சோயப் அக்தர் கருத்துக்கு கனேரியாவும் பதில் அளித்தார். கனேரியா கூறியதாவது, என்னைப் போன்றே குற்றம் சுமத்தப்பட்ட சக வீரர்கள் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய உதவியுடன் மீண்டும் விளையாடினார்.
ஆனால், என்னை மட்டும் வேண்டும் என்றே பாகிஸ்தான் அரசும், கிரிக்கெட் வாரியமும் கண்டுகொள்ளவில்லை. இதற்கு சோயப் அக்தரின் வார்த்தைகளே சான்று எனக் கூறினார்.
இன்சமாம் மறுப்பு
கனேரியாவின் குற்றச்சாட்டுக்கு பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் காக் மறுப்பு தெரிவித்துள்ளார்.
கனேரியா என் தலைமையில் உள்ள அணியிலேயே இடம் பெற்றார். அவர் கூறியது போன்ற ஒரு சம்பவத்தை நான் கேப்டனாக இருந்த வரை பார்த்ததே கிடையாது.
எல்லா மதத்தவரையும் அணியில் ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு பாகிஸ்தானியர்கள் இதயம் மிகவும் பெரியது.
கங்குலி துவங்கிய ஹோட்டல்
ஒருமுறை 2005-ம் ஆண்டு சூட்டிங்கிற்காக கொல்கத்தா சென்றிருந்தேன். அப்போது இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி ஒரு ஹோட்டல் ஒன்றே துவங்கினார்.
நானும், சச்சினும் தான் அந்த ஹோட்டலை திறந்து வைத்தோம். நான் சூட்டிங்கில் இருந்த நேரம் கங்குலி எனக்கு தினமும் சாப்பாடு அனுப்புவார்.
ஒரே டேபிள்
சார்ஜாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது இந்திய வீரர்களும், பாகிஸ்தான் வீரர்களும் ஒரே டேபிளில் உட்கார்ந்து சாப்பிட்டு அரட்டை அடிப்போம்.
நான் இருந்தவரை எந்த ஒரு வீரரும் மத அடிப்படையில் ஒதுக்கப்பட்டதை நான் ஒருபோதும் பார்த்ததே கிடையாது எனத் தெரிவித்தார்.