கவுதம் காம்பீர்; ஐபிஎல் போட்டியை கட்டாயம் நடத்த வேண்டும், காரணம் இதுதான். கொரோனா பரவலின் காரணமாக ஐபிஎல் போட்டிகள் தற்காலிக தடை செய்யப்பட்டுள்ளது.
ஐபிஎல் போட்டிகள் இல்லாததால் பிசிசிஐ போர்ட்க்கு மிகப்பெரிய வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது.
இந்நிலையில் ஐபிஎல் போட்டிகள் கட்டாயம் நடத்தியே தீர வேண்டும். ஐபிஎல் நடப்பது மக்களுக்கு ஒரு விட திருப்தியும் பொழுதுபோக்கையும் ஏற்படுத்தும்.
இதனால் மக்கள் கொரோனா பரவலின் பயத்தை மறந்து ஓரளவுக்கு இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கு வழியாக அமையும்.
உலகம் முழுவதும் ஊரடங்கு காரணமாக எந்த வித விளையாட்டு போட்டிகள் நடைபெறவில்லை. இதனால் மக்களுக்கு பொழுதுப்போக்கு அம்சங்கள் எதுவுமே அமையவில்லை.
மக்களின் மனநிலையை மாற்றுவதற்கு பொழுபோக்கு நிகழ்வுகள் நடத்துவது மிக அவசியம். இதனால் மனதளவில் அவர்கள் சற்று திடப்படுவார்கள்.
ஐ.பி.எல்., தொடரை பார்க்கத் துவங்கி விட்டால், அனைத்து சூழ்நிலையும் மாறி விடும்.கடந்த 12 ஆண்டுகளில் நடந்த ஐ.பி.எல்., தொடர்களை காட்டிலும், இந்த ஆண்டு தொடர் நடப்பது மிக முக்கியம்.
ரசிகர்கள் இல்லாமல் மூடப்பட்ட காலி மைதானங்களில் அல்லது அன்னிய அணி வீரர்கள் இல்லாமல் என எப்படி நடந்தாலும் சரி மக்கள் ஒன்றிணைந்து பார்ப்பதால் கடைசியில் தேசம் வெற்றி பெரும்.