மீராமிதுன் மாடல் அழகியாக இருந்து நடிகையாக உயர்ந்தவர். 8 தோட்டாக்கள், போதை ஏறி புத்தி மாறி, தானா சேர்ந்த கூட்டம் ஆகிய படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்தவர் மீரா மிதுன்.
பிக்பாஸ் சீசன் 3-யில் கலந்துகொண்டதன் மூலம் நடிகை மீராமிதுன் (meera mithun) முகம் எல்லோருக்கும் பரிட்சியம் ஆனது.
அதன் பிறகு அம்மணியை கையில் பிடிக்க முடியவில்லை. அதிக அளவில் பட வாய்ப்பு இல்லை என்றாலும் சோசியல் மீடியாவில் யாரையாவது வம்பு இழுப்பதே இவரது முழுநேர வேலை.
சூர்யா படத்தில் நடிச்சு அஜித், விஜய் கூட எப்போ நடிக்க போறீங்க என்ற கேள்விக்கு மீரா மிதுன் “நா, தல கூட எப்போவோ நடிச்சிட்டனே” என அஜித்துடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார் மீரா மிதுன்.
அது என்னை அறிந்தால் படத்தில் நடித்த புகைப்படம். ஆனால் அந்தக் காட்சி படத்தில் இடம் பெறவில்லை. அஜித்துடன் இவ்வளவு நெருக்கமாக நின்று நடித்த காட்சி படத்தில் இல்லை என்றால் யாருக்கு தான் வருத்தம் இருக்காது?
கெளதம் மேனன் படம் சொல்லவா வேண்டும். அவர் சகட்டுமேனிக்கு காட்சிகளை எடுத்து தள்ளிவிடுவார். அவரின் எடிட்டர் தான் பாவம் அதை எப்படி குறைப்பது எனத் தெரியாமல் திக்குமுக்காடி விடுவர்.
அப்படி ட்ரிம் செய்தும் கூட 3 மணி நேரத்திற்கு படம் ஓடும். கெளதம் மேனன் நான்கு மணி நேரத்திற்கு படத்தை எடுத்துவிட்டு அத்தனை காட்சிகளும் படத்தில் இருக்க வேண்டும் என எடிட்டரை ஒரு பிராண்டு பிராண்டி விடுவார்.
என்னை அறிந்தால் படத்திலும் இதேபோல் காட்சி குறைப்பில் ஈடுபட்டபோதும் மீரா மிதுன் காட்சி அவருக்கு பிடிக்கவில்லை.
உடனே, எடிட்டரிடம் சொல்லி தூக்கி உள்ளார். ஆசை ஆசையாய் அஜித்துடன் நடித்து விட்டு கனவுடன் காத்திருந்த மீரா மிதுனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இப்படி ஏமாத்திட்டிங்களே கவுதம்?