Home விளையாட்டு இந்த ஆண்டு ஐபிஎல் நடைபெறுமா – சவுரவ் கங்குலி

இந்த ஆண்டு ஐபிஎல் நடைபெறுமா – சவுரவ் கங்குலி

258
0

இந்த வருடத்தில் ஐபிஎல் பற்றி நாங்கள் சொல்ல என்ன இருக்கிறது என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

கரோனா வைரஸ் காரணமாக பல நாடுகள் ஊரடங்கு  உத்தரவில் மக்கள் இருந்து வருகிறார்கள்.

இந்த வைரஸ் காரணமாக அமெரிக்கா ஸ்பெயின் இத்தாலி போன்ற நாடுகள் ஸ்தம்பித்துள்ளது.

பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஸ்பெயின் இத்தாலி போன்ற நாடுகளும் கணிசமான இழப்புகளை சந்தித்து வருகிறது.

உலகம் முழுவதும் பல லட்சம் மக்கள் பாதிப்பு உள்ளார்கள். இந்தியாவிலும் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு 300க்கும் மேற்பட்ட இழப்புகள் இதுவரை நிகழ்ந்துள்ளன.

பிரதமர் மோடி அறிவித்த படி இந்திய மக்கள் 21 நாள் ஊரடங்கு உத்தரவில் இருந்து வருகிறார்கள்.

அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே வெளியில் வரும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது

உலகெங்கிலும் எந்த ஒரு விளையாட்டும் நடைபெறாமல் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த வருடம் நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டிகள் கூட அடுத்த வருடம் நடத்த திட்டமிட்டுள்ளது.

மார்ச் 28ஆம் தேதி தொடங்க இருந்த ஐபிஎல் போட்டிகளுக்கு நிறுத்தி வைக்கப்பட்டன. பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி ஏப்ரல் 15ஆம் தேதிக்கு மேல் ஒத்தி வைத்திருந்தார்.

தற்போது ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ என்ற நாளிதழுக்கு பேசியுள்ள சவுரவ் கங்குலி, ஐபிஎல் குறித்து கூறியுள்ளார். அவர் கூறியதாவது :

“நாங்கள் நாட்டின் முன்னேற்றத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இப்போது ஏதும் சொல்ல முடியாது. சொல்ல என்ன இருக்கிறது?

விமான நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மக்கள் அனைவரும் வீட்டினுள்ளே சிக்கி தவிக்கிறார்கள். அலுவலகம் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

யாரும் எங்குமே போக முடியாதவர்களுக்கு நாட்டின் சூழ்நிலை இருக்கின்றது. மே மாதம் நடுப்பகுதி வரை இப்படித்தான் நடுப்பகுதி வரை இப்படித்தான் இருக்கும் என்றும் தோன்றுகிறது.

இப்படி இருக்கும் சூழ்நிலையில் நீங்கள் எங்கிருந்து வீரர்கள் வர வைப்பீர்கள். எப்படி வீரர்கள் பயணம் செய்வார்கள். இந்த நேரம் உலகத்திலுள்ள எந்த ஒரு நாட்டுக்கும் சாதகமாக இல்லை.

அதனால் ஐபிஎல்லில் மறந்து விடுங்கள். நாளை மற்ற பிசிசிஐ பொறுப்பாளர்களுடன் ஆலோசித்த பிறகு நான் இதைப் பற்றி கூறமுடியும்.” என்று கூறியுள்ளார்

இவர் கூறியதை வைத்து பார்த்தால் இந்த ஆண்டு ஐபிஎல் நடைபெறுவது என்பது சந்தேகமே.

கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வைரஸ் கட்டு கொள்ளுவது இன்னும் சில மாதங்கள் ஆகும்.

இந்நிலையில் ஐபிஎல் இந்த வருடம் ரத்து செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன

Previous articleவிஜய் டிவி ஜாக்குலினை தாக்க முயன்றார் பக்கத்து வீட்டுக்காரர்
Next articleதமிழக முதல்வரை சாடிய கமல்ஹாசன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here