Home சினிமா கோலிவுட் விஜய் டிவி ஜாக்குலினை தாக்க முயன்றார் பக்கத்து வீட்டுக்காரர்

விஜய் டிவி ஜாக்குலினை தாக்க முயன்றார் பக்கத்து வீட்டுக்காரர்

630
0

விஜய் டிவி கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமானவர்தான் ஜாக்லின்.

இவர் நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அதில் நயன்தாராவுக்கு தங்கையாக நடித்து நடிப்பில் அசத்தியிருந்தார்.

விஜய் டிவியில் தற்போது அவர் தேன்மொழி பி ஏ பி எல் என்ற தொடர்களில் நாயகியாக நடித்து வருகிறார். இந்த தொடர் மக்களிடையே மிகவும் பிரபலமானது.

தற்போது இந்தியாவில் 21 நாள் ஊரடங்கு உத்தரவால் வீட்டில் ஜாக்லின் இருந்து வருகிறார்.

தெருவில் சுற்றித்திரியும் நாய்களுக்கு உணவு அளிக்கும் போது, பக்கத்து வீட்டில் சென்று உணவு வைத்துள்ளார். இதை பக்கத்து வீட்டுக்காரர் பார்த்து விட்டார்.

இவரும் ஜாக்கிலினும் சண்டைபோட்டு ஜாக்கிலினின் மதத்தை பற்றியும் கூறி வம்பு இழுத்துள்ளார்.

இந்நிலையில் ஜாக்குலின் தனக்கு நேர்ந்த கொடுமையான சம்பவத்தை சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

“இன்று எனக்கும் எனது பக்கத்து வீட்டுக்காரருக்கும் இடையே சண்டை நடந்தது. நான் ஒரு பெரிய தவறு செய்துவிட்டேன். எனது பக்கத்து வீட்டு வாசலில் தெரு நாய்களுக்கு சாப்பாடு வைத்துவிட்டேன்.

எனது வீட்டிலும் நாய் இருப்பதால், தெரு நாய்கள் வரும் போது அது சத்தம் போடுகிறது (அது மிகப்பெரிய தவறு).

நான் செய்த தவறுக்கு நான் மன்னிப்பு கேட்டுவிட்டேன். ஆனால் சண்டையின் போது அவர் என்னை திட்ட பயன்படுத்திய ஒரு வார்த்தை என்னை மிகவும் தொந்தரவு செய்துவிட்டது.

வீடு புகுந்து சாத்திருவேன்.. கிறிஸ்துவ பொண்ணு என்பதால் விடுறேன்’ என என் பக்கத்து வீட்டுக்காரர் கூறினார்.”

இந்த பிரச்சினைக்கும் மதத்துக்கும் என்ன சம்பந்தம் என எனக்கு தெரியவில்லை. இந்த கடினமான சூழ்நிலையிலாவது குறைந்தபட்சம் மனிதர்களாக இருப்போம்,” என அவர் பதிவிட்டுள்ளார்.

Previous article13/04/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil
Next articleஇந்த ஆண்டு ஐபிஎல் நடைபெறுமா – சவுரவ் கங்குலி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here