IPL 2020: தோனியின் ஐபிஎல் பிளே ஆஃப் ரகசியம் என்ன? இறுதிப்போட்டிகளில் எப்படி வெற்றி பெறுவது என்ற ரகசியத்தை தோனி கண்டுபிடித்தாரா?
IPL 2020 – ஐபிஎல் 2020
2008-ஆம் ஆண்டு இந்தியாவில் மிகவும் கோலாகலமாக தொடங்கியது ஐபிஎல் திருவிழா. இன்று வரை ஐபில் என்று சொன்னால் கிரிக்கெட் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.
ஐபிஎல் தொடரில் சென்னை அணி பல சூதாட்ட பிரச்சனைகளை சந்தித்து வந்தாலும் தன் ரசிகர்கள் வேறு அணி பக்கம் மாறாமல் வைத்திருக்கிறது.
காரணம் ஒருவர் மட்டுமே. தல என்று செல்லமாக அழைக்கப்படும் மகிந்திர சிங் தோனி இதற்கு காரணம்.
ஐபிஎல் போட்டியில் சென்னை அணி நிர்வாகம் செய்த முதல் நல்ல விசயம் தோனியை நம் பக்கம் வாங்கியதே.
ப்ளே ஆஃப் கிங்க்ஸ்
சூதாட்ட புகார் காரணமாக சென்னை அணி விளையாடாத 2016 மட்டும் 2017 ஆண்டு தவிர்த்து விளையாடிய அனைத்து ஐபில் போட்டியிலும் பிளே ஆஃப் சென்று விடும்.
இதில் 8 தடவை இறுதி வரை சென்றுள்ளது. மூன்று தடவை கோப்பையை வென்றுள்ளது. ஐசிசி இருபது ஓவர் உலககோப்பையை 2007 ஆம் ஆண்டு முதல் முறையாக அறிமுகப்படுத்துகிறது.
தோனி முதல் முறையாக கேப்டன் பதவியில் சென்று கோப்பையுடன் நாடு திரும்பினார். அடுத்த ஆண்டே தொடங்கப்பட்டது ஐபிஎல் போட்டி.
அன்று இளமையான தோனி சென்னையை வழி நடத்துகிறார். எதிர் அணிகள் தலைவர்கள் அனைவரும் ஜாம்பவான்கள்.
முதல் ஐபிஎல் போட்டியில் இறுதிவரை சென்று ராஜஸ்தானிடம் கடைசி பந்தில் நான்கு விக்கெட்டில் தோல்வியைத் தழுவியது.
2009-ஆம் ஆண்டு பிளே ஆஃப் வரை சென்று பெங்களூர் அணியிடம் 6 விக்கெட்டில் தோல்வி. 2010 ஆம் ஆண்டு 22 ரன் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியும், 2011 ஆம் ஆண்டு பெங்களூரை 58 ரன்களில் வீழ்த்தியும் தொடர்ந்து இருமுறை கோப்பையை கைப்பற்றியது.
ஆனால் 2012-ஆம் ஆண்டு இறுதி ஆட்டத்தில் கொல்கத்தாவிடம் 5 விக்கெட்டிலும், 2013-ஆம் ஆண்டு மும்பையுடம் 23 ரன்களிலும் தோல்வி அடைந்தது.
ஆனால் தொடர்ந்து நான்கு முறை இறுதி ஆட்டத்திற்கு சென்றது குறிப்பிடத்தக்கது. 2014-ஆம் ஆண்டு மிகப் பெரிய ரன்களை துரத்தும் போது 24 ரன்களில் பஞ்சாப் அணியுடன் தோல்வியைத் தழுவியது.
2015-ஆம் ஆண்டு இறுதி ஆட்டத்தில் மும்பை அணியுடன் 41 ரன்களில் தோல்வியடைந்தது. 2016 மற்றும் 2017ஆம் ஆண்டு சூதாட்ட புகாரில் விளையாட தடை வாங்கியது.
வயதான வீரர்கள்
இரண்டு வருட கோப்பை பசியில் இருந்த வந்த சென்னை அணி சீனியர் வீரர்களை வாங்கியது. மற்ற அணி ரசிகர்கள் வயதான அணி என்று கூட கிண்டல் செய்தார்கள்.
2018-ஆம் ஆண்டு ஐதராபாத் அணி வாட்சன் சதத்துடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் கோப்பையை வென்றது. கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் வெற்றியின் அருகில் வந்து ஒரு ரன்னில் தோல்வி அடைந்தது.
100 போட்டிகளில் வெற்றி
165 ஐபிஎல் போட்டிகளில் ஆடிய சென்னை அணி 100 போட்களில் வென்றுள்ளது. சென்னை அணிக்கு இந்தியா முழுவதும் ரசிகர் பட்டாளமே உள்ளது காரணம் தோனி என்கிற ஒரு சொல் மட்டுமே.
தோனியின் கூல் கேப்டனாக வெற்றியை தலையில் ஏற்றிக் கொள்ளவும் மாட்டார், தோல்வியால் துவண்டு விடவும் மாட்டார்.
அணியினரிடம் எப்போதும் பார்வையிலே பேசுவார். என்றும் உறுதுணையாக வீரர்களிடம் இருப்பார்.
தோல்விக்கு பொறுப்பு ஏற்பார். இது முடிவு அல்ல பயணம் இன்னும் இருக்கின்றது என்று அணியை வழி நடத்துவார். எது எப்படி இருந்தாலும் 2020-ஆம் ஆண்டு ஐபிஎல் அடுத்த மாதம் தொடங்கவுள்ளது.
இறுதி சுற்று ரகசியம் என்ன?
தல தோனி மேல் உள்ள நம்பிக்கையில் இந்த தடவையும் சென்னை ரசிகர்களுக்கு சென்னை அணிக்கு ப்ளே ஆஃப் போட்டியில் தான் போட்டி ஆரம்பம் ஆகிறது என்று லீக் போட்டிகளை எந்த ஒரு தோல்வி பதட்டமில்லாமல் பார்க்க காத்திருக்கிறார்கள்.
இதில் சோகம் என்னவென்றால் 8 தடவை இறுதிக்கு சென்று 5 தடவை தோல்வியும் ஆகியுள்ளது. ஐபிஎல் பிளே ஆஃப் ரகசியம் தெரிந்த தோனிக்கு இறுதி ஆட்டத்தின் ரகசியத்தை கண்டுபிடிப்பது சிரமமாகவே உள்ளது.