எனக்கு பிடித்த இந்திய கிளாஸ் பேட்ஸ்மேன் இவர்தான் – பிரைன் லாரா
இந்திய அணியில் கடந்த சில காலங்களாகவே சிறப்பாக விளையாடி வரும் வீரர் கே.எல். ராகுல்.
நடந்து முடிந்த நியூசிலாந்து தொடரில் ஒரு நாள் மற்றும் டி20 போட்டியில் அற்புதமாக விளையாடிய ராகுல், டெஸ்ட் அணியில் இடம் பெறவில்லை.
இவர் மட்டுமே நிலையான ஆட்டத்தை நியூசிலாந்தில் விளையாடி வந்தார். வீக்கெட் கீப்பிங் வேலையையும் திறம்பட செய்தார்.
லிஜென்ட் கிரிக்கெட்டில் விளையாடி வரும் லாரா நேற்று நிருபர்களுக்கு போட்டி அளித்தார்.
அதில் அவர் கூறியது ”
தனி கிளாஸ் ரகமாக பேட்டிங் செய்யும் கே.எல். ராகுல் தான் எனக்கு பிடித்த இந்திய பேட்ஸ்மேன்.
அவருடைய பேட்டிங்கை பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. சர்வதேச கிரிக்கெட்டின் சிறந்த பொழுதுபோக்கு வீரர்.
தற்போது விராட் கோலி உலகின் சிறந்த வீரர் என்றாலும் எனக்கு கே.எல்.ராகுல் தான் எனக்கு பிடித்த வீரர். இவர் டெஸ்ட் அணியில் இடம் பெறாதது எனக்கு ஆச்சரியம் அளிக்கிறது.
அவர் உத்தியாக பேட்டிங் செய்யும் விதம் நிச்சியமாக அனைத்து வகை கிரிக்கெட்டிலும் இருக்க வேண்டும் என்பதே நான் பார்க்கிறேன்.
அனைத்து வடிவங்களிலும் விளையாடும் திறமை ராகுலுக்கு உள்ளது. எந்த ஒரு இந்திய அணியாக இருந்தாலும் விராட் கோலிக்கு அடுத்த பெயராக ராகுல் இருக்க வேண்டும் என்பது என் எண்ணம்” என்று கூறியுள்ளார்.
கடந்த சனிக்கிழமை நடந்த இந்திய லிஜென்ட் அணியிடம் வெஸ்ட் இண்டீஸ் லெஜன்ட் அணி தோல்வி அடைந்தது குறிப்பிடதக்கது.