Home சினிமா கோலிவுட் திருமண நாள் கொண்டாட்டத்தில் ஆர்யா – சாயிஷா ஜோடி!

திருமண நாள் கொண்டாட்டத்தில் ஆர்யா – சாயிஷா ஜோடி!

3265
0
Arya Sayyeshaa First Wedding Anniversary

Arya Sayyeshaa First Wedding Anniversary; ஆர்யா – சாயிஷா தம்பதியினர் இன்று தங்களது முதலாவது திருமண நாளை கொண்டாடுகின்றனர்.

அவர்களுக்கு மிஸ்டர் புயல் இணையதளம் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆர்யா – சாயிஷா திருமணம் (Arya Sayyeshaa Wedding Anniversary) செய்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது. அதனை இருவரும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். அறிந்தும் அறியாமலும் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ஆர்யா (Arya).

உள்ளம் கேட்குமே, ஒரு கல்லூரியின் கதை, நான் கடவுள், மதராசபட்டினம், ராஜா ராணி, ஆரம்பம் என்று மாஸ் படங்களில் நடித்துள்ளார்.

இதே போன்று வனமகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சாயிஷா சைகல் (Sayyeshaa Saigal).

வனமகன் படத்தைத் தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், ஜுங்கா ஆகிய படங்களில் நடித்துள்ளனர்.

இதையடுத்து, கஜினிகாந்த் படத்தில் நடித்தார். இந்தப் படத்தில் ஆர்யா முன்னணி ரோலில் நடித்திருந்தார்.

ரொமாண்டிக் காமெடி கதையை மையப்படுத்திய இந்தப் படத்தில் ஆர்யாவின் அப்பா ரஜினியின் தீவிர ரசிகர்.

ஆதலால், ஆர்யாவிற்கு ரஜினி என்ற கஜினிகாந்த் என பெயர் வைத்திருப்பார்.

ஆனால், ஆர்யாவின் டைவர்ஷன் மறதியால் அவருக்கு பெண் கொடுக்க பலரும் மறுக்கிறார்கள்.

இந்த நிலையில், சாயிஷாவின் அப்பா சம்பத் ராஜ் ஆர்யாவை பார்க்க வருகிறார்.

தனது ஞாபக மறதியால், சாயிஷாவின் அப்பாவை நீண்ட நேரமாக காக்க வைக்க, அவரோ ஆத்திரமடைந்து அங்கிருந்து புறப்பட்டுச் செல்கிறார்.

அதன் பிறகு ஆர்யா, சாயிஷாவை காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் சம்பத் ராஜின் மகள் தான் சாயிஷா என்பது ஆர்யாவிற்கு தெரியவருகிறது.

இறுதியில் என்ன நடந்தது என்பதே மீதிக் கதை. இப்படத்தின் மூலமாக இருவரும் புரிந்து கொண்டு ஒருவருக்கொருவர் நிஜத்திலும் காதலித்து வந்துள்ளனர்.

இதையடுத்து, இருவரும் பெற்றோர்கள் சம்மதத்துடன் கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் 10 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.

சாயிஷா மும்பையைச் சேர்ந்தவர் என்பதால், ஹைதராபாத்தில் 9 மற்றும் 10 ஆகிய தேதிகள் ஆர்யா – சாயிஷா (Arya Sayyeshaa Wedding) திருமணம் நடந்தது.

இவர்களது திருமண நிகழ்ச்சியில் சஞ்சய் தத், ஆதித்யா பஞ்ஜோலி, குஷி கபூர், அல்லு அர்ஜூன், விஷால், ராணா டகுபதி, சூர்யா, கார்த்தி ஆகியோர் உள்பட ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து 14 ஆம் தேதி சென்னையில் ஆர்யா – சாயிஷா திருமண வரவேற்பு (Arya Sayyeshaa Wedding Reception) நிகழ்ச்சி நடந்தது.

கோலிவுட் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், தற்போது ஆர்யா – சாயிஷா (Arya Sayyeshaa First Wedding Anniversary) திருமணம் செய்து கொண்டு ஓராண்டு ஆன நிலையில், இன்று தங்களது முதலாவது திருமண நாளை கொண்டாடுகின்றனர்.

அவர்களுக்கு பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மிஸ்டர் புயல் இணையதளம் சார்பில் ஆர்யா – சாயிஷா தம்பதியினருக்கு நாங்களும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

திருமணத்திற்குப் பிறகு ஆர்யா – சாயிஷா இருவரும் சூர்யா நடிப்பில் வந்த காப்பான் படத்தில் நடித்திருந்தனர்.

ஆனால், அந்தப் படத்தில் சாயிஷா, சூர்யாவிற்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இப்படத்தைத் தொடர்ந்து ஆர்யா, சாயிஷா நடிப்பில் டெடி படம் உருவாகியுள்ளது. இப்படத்தில், இருவரும் இணைந்து ஜோடியாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தின் டீசர் ஆர்யா – சாயிஷாவின் முதலாவது திருமண நாளை முன்னிட்டு இன்று காலை 11 மணிக்கு வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

SOURCER SIVAKUMAR
Previous articleஎனக்கு பிடித்த இந்திய கிளாஸ் பேட்ஸ்மேன் இவர்தான் – பிரைன் லாரா
Next articleதிருமண நாளுக்கு ட்ரீட் கொடுத்த டெடி டீசர்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here