வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நியூசிலாந்து அணியின் மார்டின் குப்டில் உலக கோப்பையில் 237 ரன்கள் அடித்து உலக சாதனை படைத்த நாள் இன்று.
2015ஆம் ஆண்டு உலகக் கோப்பை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெற்றது.
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கிறிஸ் கெயில் 215 ரன்கள் அடித்து உலக கோப்பையில் ஒரு தனிநபர் அதிகபட்ச ரன் எடுத்தார்.
அவருடன் சாமியுல்ஸ் கூட்டணி அமைத்து இருவரும் சேர்ந்து 372 ரன்கள் எடுத்தனர். ஆனால் கெயில் அடித்த சாதனை ஒரு மாதம் கூட தாக்குப் பிடிக்க முடியவில்லை.
அதே உலகக்கோப்பையில் மார்ச் 21-ஆம் தேதி வெலிங்டனில் நடைபெற்ற கிறிஸ் கெயில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நியூசிலாந்து களமிறங்கியது.
டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. கிறிஸ் கெயில் நான்தான் உலகக்கோப்பையில் அதிக ரன் அடித்த வீரர் என்ற பெருமையுடன் விளையாடிக் கொண்டிருந்தார்.
நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மார்டின் குப்டில் மற்றும் பிரண்டன் மெக்கல்லம் களமிறங்கினார்கள்.
மெக்குல்லம் 12 ரன்னில் வெளியேற அடுத்துவந்த வில்லியம்சன் 33 ரன்களில் அவுட்டானார். நான்காவது வீரராக களமிறங்கிய ராஸ் டைலர் உடன் மார்ட்டின் கப்தில் அதிரடியை தொடங்கினார்.
ராஸ் டெய்லர் பொறுமையாக 42 ரன்கள் எடுக்க குப்தில் பந்தை சிக்சரும் பவுண்டரியாக விளாசி தள்ளி சதம் அடித்தார்.
நியூசிலாந்தில் அடுத்தடுத்து விக்கெட் விழுந்தாலும் மார்ட்டின் கப்தில் விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை அவர் அதிரடியை தடுக்கவும் முடியவில்லை.
அதனால் மார்டின் குப்தில் சதத்தை இரட்டை சதம் ஆக மாற்றி உலக கோப்பையில் 2-வது வீரராக இரட்டை சதம் அடித்தார்.
முதல் ஓவரில் களமிறங்கிய மார்டின் குப்டில் இறுதி ஓவரில் கடைசி பந்து வரைக்கும் தன் விக்கெட்டை பறி கொடுக்காமல் வெஸ்ட் இண்டீஸின் பந்துவீச்சாளர்களை விளாசித் தள்ளினார் .
இதே உலக கோப்பையில் கிறிஸ் கெயில் 215 ரன்கள் எடுத்து உலக சாதனையாக இருந்தது. ஆனால் அந்த சாதனையை இந்தப் போட்டியில் மார்டின் குப்டில் முறியடித்து 237 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
173 பந்துகளை சந்தித்த மார்டின் குப்டில் 24 பவுண்டரிகளும் 11 சிக்சர்களை விளாசினார். இன்று வரை இதுவே ஒருநாள் போட்டி உலக கோப்பையில் தனிநபர் அதிகபட்சம் ஆகும்.
ஆனால் ஒருநாள் போட்டியில் இரண்டாவது அதிகபட்சமாகவும் இருக்கிறது. முதலிடத்தில் இலங்கைக்கு எதிராக ரோகித் சர்மா 264 ரன்கள் ஆகும்.
50 ஓவர்களுக்கு நியூசிலாந்து அணி 393 ரன்கள் 6 விக்கெட்டை இழந்து எடுத்தது.
நியூஸிலாந்து மார்ட்டின் கப்தில் போல் வெஸ்ட் இண்டீஸ் அணி அதிரடி வீரரான, உலககோப்பையில் தனிநபர் அதிகபட்சம் வைத்த கிறிஸ் கெயில் களமிறங்கினார். பெரிதாக இந்த போட்டி எதிர்பார்க்கப்பட்டது.
கிறிஸ் கெயில் வந்தவுடனேயே 8 சிக்ஸர்களும் இரண்டு பவுண்டரிகள், மொத்தம் 33 பந்துகளில் 66 ரன்கள் எடுத்தார்.
இவர் போகும் வேகத்தில் அவுட் ஆகாமல் இருந்திருந்தால் ஒருவேளை வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால் அடுத்த பந்தில் அவுட் ஆகி வெளியேறினார்.
வெஸ்ட் இண்டீஸ் அணி 30 ஓவர்களிலேயே 250 ரன்களை தொட்டது. ஆனால் என்ன செய்வது அனைத்து விக்கெட்டையும் இழந்து 143 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியிடம் தோல்வி அடைந்தது.
வெஸ்ட் இண்டீஸ் அணி 117 பந்துகள் மீதம் இருந்தன ஒருவேளை விக்கெட் இருந்திருந்தால், கெயில் அவுட்டாகாமல் விளையாடி இருந்தால், வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றிருக்க வாய்ப்பு இருந்திருக்கும்.
இந்த போட்டியில் நியூசிலாந்து பேட்டிங் செய்யும்போது மூன்று அல்லது நான்கு ஓவர்கள் இருந்திருந்தால் குப்டில் ஒருவேளை ரோஹித் சர்மாவின் மிகப்பெரிய உலக சாதனையை முறியடிக்க வாய்ப்பு இருந்திருக்கும்.
ரோகித் சர்மாவின் 264 மற்றும் மார்ட்டின் கப்தில் 237 ரன்கள் எடுத்த சாதனையை முறியடிப்பது கடினமான ஒன்று.