ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி ஆக்ரோஷம் காணாமல் போனதற்கு தற்போதுள்ள ஆஸ்திரேலிய வீரர்கள் தான் காரணம் என்று மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார்.
பத்து வருடங்களுக்கு முன்பு கிரிக்கெட்டின் ஜாம்பவான் யார் என்று கேட்டால் சின்ன குழந்தையும் சொல்லும் அது ஆஸ்திரேலியா அணி என்று.
அதே சின்ன குழந்தையிடம் ஸ்லெட்ஜிங் செய்து வெற்றி பெறும் அணி யாரென்று கேட்டால் அதுவும் ஆஸ்திரேலிய அணி தான்.
ஆஸ்திரேலிய அணி தோல்வி அடையப் போகிற நிலைமைக்கு வந்தால் அவர்கள் கையில் எடுக்கும் யுக்தி ஸ்லெட்ஜிங் முறை.
மற்ற அணி வீரர்களை களத்திலும், மைதானத்துக்கு வெளிகளும் ஸ்லெட்ஜிங் செய்வதிலும் வல்லவர்கள்.
ஆஸ்திரேலியா அணிக்கு கேப்டன்களும் இதே போல்தான்.
ரிக்கி பாண்டிங், டேமியன் மார்ட்டின், மேத்யூ ஹைடன், ஆண்ட்ரூ சைமண்ட்ஸ், மைக்கல் கிளார்க், கில்லஸ்பி மிட்செல் ஜான்சன் போன்ற முன்னாள் ஆஸ்திரேலியா வீரர்கள் ஸ்லெட்ஜிங் செய்வதில் வல்லவர்கள்.
மிட்செல் ஸ்டார்க், ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் தற்போது இந்த முறையை கையில் எடுக்கிறார்கள்.
ஐசிசி ஸ்லெட்ஜிங் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. மீறி செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் இன்று புதிய விதிமுறையும் கொண்டு வந்தது.
இதனால் தற்போது கிரிக்கெட்டில் ஸ்லெட்ஜிங் செய்வது மிகவும் குறைவு.
இதனால் ஆஸ்திரேலியாவில் ஆக்ரோஷமாக விளையாடுவதை விட்டுவிட்டு இயல்பான ஆட்டத்தை விளையாடி வருகிறார்கள். இதனால் பல தோல்விகளையும் பெற்று வருகிறார்கள்.
தற்போது இது குறித்து முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரும், 2015 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு உலக கோப்பை வென்று கொடுத்தவருமான மைக்கேல் கிளார்க் கூறியதாவது :
உலக கிரிக்கெட்டில் இந்திய அணி மிகப் பெரிய பலம் பொருந்தியது என நாம் அறிவோம். சர்வதேச கிரிக்கெட் ஆக இருந்தாலும் சரி, உள்நாட்டு தொடர் ஐபிஎல் யாக இருந்தாலும் சரி.
ஆஸ்திரேலிய அணியும் ஆஸ்திரேலியா வீரர்களும் சமீப காலமாக இந்திய வீரர்களை குறிப்பாக விராட் கோலி போன்ற நட்சத்திர வீரர்களிடம் ஸ்லெட்ஜிங் செய்வதை நிறுத்திவிட்டனர்.
ஆஸ்திரேலிய வீரர்கள் சுயநலத்துக்காக இந்தியாவிடம் பணிந்து நடந்து கொள்கிறார்கள்.
வருட வருடம் ஏப்ரல் மாதம் இந்தியா வந்து ஐபிஎல் விளையாட வேண்டும்.
இதனால் இந்திய வீரர்களையும் மற்றும் மற்ற அணி வீரர்களையும் ஸ்லெட்ஜிங் செய்ய பயந்து கொண்டிருக்கின்றனர்.
இதனால் வழக்கமான ஆஸ்திரேலியாவில் ஆக்ரோஷ போக்கே காணாமல் போனது என்று மைக்கேல் கிளார்க் குற்றம்சாட்டியுள்ளார்.
இவர் சொல்லும் குற்றம் நியாயமற்றது. ஐசிசி கடுமையான விதிகளை விதித்துள்ளதால் விராட் கோலி போன்ற வீரர்கள் கூட ஸ்லெட்ஜிங் செய்வதை நிறுத்திவிட்டனர்.