கிரிக்கெட்டின் சச்சின் டெண்டுல்கர் போல ஒரு டெக்னிக்கல் வீரரை நான் பார்த்ததில்லை என்று மைக்கேல் கிளார்க் புகழாரம் சூட்டியுள்ளார்.
கொரோனா வைரஸ் தற்போது மக்களை மட்டும் பாதிக்கவில்லை, விளையாட்டுக்களையும் பாதித்துள்ளது.
இதனால் எந்தவித விளையாட்டுகளும் எந்த நாட்டில் நடைபெறவில்லை. இதனால் விளையாட்டு வீரர்அகள் என்ன செய்வதென்று தெரியாமல் வீட்டிலேயே முடங்கி உள்ளார்கள்.
ஆனால் சமூக வலைதளங்களில் சில கிரிக்கெட் வீரர்கள் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகின்றனர். குறிப்பாக கெவின் பீட்டர்சன், விராட் கோலி, ரோகித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா போன்றவர்கள் ரசிகர்களுக்கு சமூக வலைதளங்களில் பதிலளித்து வருகிறார்கள்.
ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிக்கு ஆஸ்திரேலியாவில் 2015ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வாங்கி கொடுத்த முன்னாள் வீரர் மைக்கேல் கிளார்க் பேட்டியளித்துள்ளார்.
அவர் தான் எதிர்கொண்ட சிறந்த ஏழு பேட்ஸ்மேன்களை தேர்வு செய்து அதற்கான விளக்கமும் அளித்துள்ளார்.
அவர் தேர்வு செய்த முதல் வீரர் பிரையன் லாரா உலகில் மிகச்சிறந்த டெஸ்ட் வீரராக வலம் வந்தவர் தான் பிரைன் லாரா.
இரண்டாவதாக சச்சினை தேர்வு செய்து நான் பார்த்ததிலேயே மிக டெக்னிக்கலாக விளையாடும் வீரர் இவர் தான் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.
மூன்றாவது வீரராக விராட் கோலியை தேர்வு செய்துள்ளார. அனைத்து வடிவங்களிலும் அற்புதமாக விளையாடக்கூடிய வீரர் என்றும் கூறியுள்ளார்.
நான்காவதாக கிரிக்கெட்டின் 360 என்று அழைக்கப்படும் ஏபி டிவில்லியர்ஸை தேர்வு செய்துள்ளார்.
ஐந்தாவதாக காலிஸ், ஆறாவதாக ரிக்கி பாண்டிங், ஏழாவதாக சங்ககரா போன்றவர்களைத் தேர்வு செய்துள்ளார்.
மைக்கேல் கிளார்க் மேலும் சச்சினை தேர்வு செய்தபோது அவர் கூறியதாவது :
“சச்சினுக்கு மிகவும் டெக்னிக்கலாக விளையாடக்கூடிய வீரர். அவர் விளையாடும் போது அவரை வீழ்த்துவது என்பது மிகவும் கடினமான ஒன்று.
அவர் தானாக முன்வந்து தவறு செய்தால் மட்டுமே அவரை வீழ்த்த முடியும்” என்று கூறியிருந்தார்.