ஸ்ரேயாஸ் அய்யர் தன் டிவிட்டர் பக்கத்தில் தனக்கு பிடித்த ஐந்து பேட்ஸ்மேன்களை பதிவிட்டுள்ளார். தற்போது அந்த ட்விட் வைரலாகி வருகிறது
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தென் ஆப்பிரிக்க அணி முதல் ஒருநாள் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.
மற்ற இரண்டு போட்டிகளும் கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக ரத்து செய்யப்பட்டது.
மார்ச் 29ஆம் தேதி நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டியும் இந்த வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஏப்ரல் 15ஆம் தேதிக்கு மேல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்திய மக்கள் அனைவரும் பிரதமர் மோடி அறிவித்த படி இருபத்தி ஒரு நாள் ஊரடங்கு உத்தரவு வீட்டினுள்ளேயே உள்ளனர். வீரர்களுக்கும் இதே நிலைமைதான்.
பல நாடுகள் ஜூன் மாதம் வரை கிரிக்கெட்டை ஒத்திவைத்துள்ளது. ஆக இந்த வருடம் ஐபிஎல் நடைபெறுமா என்பது சந்தேகம்தான்.
தற்போது ஸ்ரேயாஸ் அய்யர் வீட்டில் இருப்பதால் ட்விட்டரில் சில பதிவுகளை பகிர்ந்து வருகிறார். அதில் தனக்கு பிடித்த ஐந்து பேட்ஸ்மேன்களை யார் யார் என்று கூறியுள்ளார்.
சச்சின் டெண்டுல்கர், ரோகித் சர்மா, விராட் கோலி இந்திய வீரர்களையும், இங்கிலாந்து வீரரான கெவின் பீட்டர்சன், தென்னாப்பிரிக்காவில் ஏபி டிவிலியர்ஸ் என இந்த ஐந்து பேர்கள் தான் என் முன்மாதிரி மற்றும் இவர்களைப் போல் தான் நான் விளையாட கருதுகிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். இவர் போட்ட இந்த பதிவு தற்போது ட்விட்டரில் வைரலாகி வருகிறது.
இந்தியாவின் ஒருநாள் மற்றும் டி20 போட்டி வீரரான ஸ்ரேயாஸ் ஐயர் 18 ஒருநாள் போட்டி மற்றும் 22 டி20 போட்டிகளில் விளையாடி ஆயிரத்து 1165 ரன் எடுத்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியில் இடம்பெற்ற ஸ்ரேயாஸ் அய்யர் தொடர்ச்சியாக அரை சதம் அடித்தது குறிப்பிடத்தக்கது.