இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 26 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து மோசமான வரலாறு படைத்த நாள் இன்று.
நியூசிலாந்து சுற்றுப்பயணம்
1955ஆம் ஆண்டு நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது இங்கிலாந்து அணி
முதல் டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி இருந்தது.
இரண்டாவது டெஸ்ட் போட்டி
இரண்டாவது டெஸ்ட் போட்டி மார்ச் 25ஆம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி 89 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 200 ரன்கள் எடுத்தது நியூசிலாந்து அணி.
அந்த அணியில் அதிகபட்சமாக ரேய்டு 73, ஸ்கல்வி 49, ராபேனே 29 ரன்கள் எடுத்தனர்.
இங்கிலாந்து அணி தரப்பில் ஸட்தாம் 4 விக்கெட்டும், ஆப்பிள்யார்டு 3 விக்கெட்டும் எடுத்தனர்.
இங்கிலாந்து 246
அடுத்து முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டையும் இழந்து 120 ஓவர்களில் 246 ரன்கள் எடுத்தது.
இந்த அணியில் அதிகபட்சமாக ஹட்டன் 53, மே 48, ஸிம்ஸன் 23, டாவ்சன் 27, கவ்டுரே 22 ரன்கள் எடுத்தனர்.
நியூசிலாந்து தரப்பில் மோய்ர் 5 விக்கெட்டும், ஹேய்ஸ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
மார்ச் 28
46 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சை ஆடிய நியூஸிலாந்து அணி நான்காவது நாள் அதாவது மார்ச் 28ஆம் தேதி மிகப்பெரிய மோசமான கிரிக்கெட் வரலாறு படைத்தது.
நியூசிலாந்து படைத்த சாதனை
ஆம் 26 ரன்களுக்கு இரண்டாவது இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 20 ரன் மற்றும் இன்னிங்ஸ் இங்கிலாந்திடம் தோல்வி அடைந்தது.
நியூசிலாந்து அணியின் ஸ்கல்வி அதிகபட்சமாக 11 எடுத்தார். அந்த அணியில் நான்கு வீரர்கள் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆகினர், ஒருவர் ரன் ஏதும் எடுக்காமல் களத்தில் நின்றார்.
மொத்தத்தில் நியூசிலாந்து அணியில் பத்து வீரர்கள் ஒற்றை இலக்க அதாவது ஐந்து ரன்களை கூட தாண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து அணியின் ஆப்பிள் யார்டு 4 விக்கெட்டுகளும் ஸட்தாம் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி நியூசிலாந்து அணியின் பேட்ஸ்மேன்களை நிலைகுலைய வைத்தனர்.
இன்றுவரை இந்த சாதனை
1955ஆம் ஆண்டு படைத்த இந்த சாதனை இன்று வரை யாராலும் முறியடிக்கப்படாத மிகப்பெரிய சாதனையாக இருந்து வருகிறது.
மார்ச் 28ம் தேதி நியூசிலாந்து கிரிக்கெட்க்கு மிகப் பெரிய கருப்பு நாளாக அமைந்து விமர்சனத்துக்கும் உள்ளானது.
இந்த ஆட்டம் 3 நாளிலேயே முடிவுக்கு வந்தது. இந்த ஆட்டத்தில் மார்ச் 27ஆம் தேதி ஓய்வு நாளாக இருந்தது.
இந்த டெஸ்ட் தொடரை 0-2 என்ற கணக்கில் நியூசிலாந்தை இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.
தென்னாப்பிரிக்காவின் சாதனை
1896 மற்றும் 1924 ஆம் ஆண்டுகளில் இங்கிலாந்து அணிக்கு எதிராக தென்ஆப்பிரிக்கா அணி டெஸ்ட் போட்டிகளில் இரண்டு முறை 30 ரன்கள் எடுத்து சாதனை படைத்து இருந்தது.
31 ஆண்டுகளுக்குப் பிறகு நியூசிலாந்து அணி 26 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது வரலாறு படைத்தது.
இந்த மோசமான வரலாற்றில் குறைந்த ரன் எடுத்த அணியின் பட்டியலில் முதலிடத்தில் நியூசிலாந்தும் அடுத்த நான்கு இடத்தில் தென்ஆப்பிரிக்கா அணி இருந்து வருகிறது.