முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான ஜாஃபர் சர்பராஸ் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு உயிரழந்தார். 50 வயதான இவர் கடந்த மூன்று நாட்களாக தீவிர சிகிச்சையில் இருந்துள்ளார்.
சர்பராஸ் 1988-ம் ஆண்டு அறிமுகமானார். மேலும் பெஷாவருக்காக 15 முதல் தர ஆட்டங்கள் விளையாடி 616 ஓட்டங்கள் எடுத்தார்.
1994ம் ஆண்டு ஓய்வு பெறுவதற்கு முன்பு ஆறு ஒருநாள் ஆட்டங்களில் 96 ஓட்டங்கள் எடுக்க முடிந்தது. 2000ஆம் ஆண்டில் பெஷாவர் அணிக்கு பயிற்சியாளராக பணிபுரிந்தார்.
பாகிஸ்தானில் மொத்தம் 5500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், தொற்றுநோயால் சுமார் 100 பேர் இறந்துள்ளனர். அதில் பெஷாவர் பகுதியில் மட்டும் 744 தொற்றுக்கள் பதிவாகியுள்ளன.