செயற்கை நுண்ணறிவு  ( ARTIFICIAL INTELLIGENCE )  என்றால் என்ன ?     

செயற்கை நுண்ணறிவு

0
242

உலகமே  இன்று வாய் ஓயாமல் மிகவும் எதிர்பார்த்து பேசிக்கொண்டிருப்பது இந்த விஷயமாகத்தான் இருக்கும் , அதுதான்  செயற்கை நுண்ணறிவு ( ARTIFICIAL INTELLIGENCE).

செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன ? நாம் பயன்படுத்தும் ஒரு எந்திரமோ, மென்பொருளோ நாம் இடும் கட்டளைகளுக்கு ஏற்ப சிந்தித்து செயல்பட்டால் அதுவே செயற்கை நுண் அறிவு.

இன்றே நாம் அத்தகைய அறிவின் ஆரம்ப நிலைகளை  பயன்படுத்தத் துவங்கி விட்டோம் , உதாரணமாக பாதைகளின் போக்குவரத்து நெரிசல்களை துல்லியமாக கூறும் கூகிள் நேவிகேட்டர்.

நம் கட்டளைகளை செவிசாய்த்து கேட்டு விடை அளிக்கும் “ அலெக்சா “ , “ கூகிள் வாய்ஸ் “ .

ஆனால் இன்னும் அந்த கடலில் சில அலைகளே இவை…!

செயற்கை நுண்ணறிவு என்பது  முக்கியமான மூன்று நிலைகளைக் கொண்டது அவை.

இயந்திர கற்றல்  ( machine learning ), இயந்திர அனுபவம் ( machine experience ), முடிவெடுக்கும் திறன் ( Decision based on AI ).

 

இயந்திர கற்றல் : 

என்னதான் அதிதுல்லிய இயந்திரமாக இருந்தாலும் , அதை நாம் தானே உருவாக்க வேண்டும். பொறுமையாக ஒரு ஆசிரியர் போல அந்த இயந்திரத்திற்கு கற்றுக்கொடுக்க வேண்டும்.

அதற்கு கால அளவுகள் இல்லை , சில நிறுவனங்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இதைத்தான் செய்து வருகின்றனர்.

இயந்திர அனுபவம் : 

சராசரி மனிதன் படித்துமுடித்து வேலைக்கு செல்வதைப்போல அந்த எந்திரமும் சில வருடங்கள் அனுபவத்தைப் பெற்று , அதன் அடிப்படையில் முடிவுகளை எடுக்கும்.  ஆனால் அனுபவம் மட்டும் துல்லிய முடிவுகளை எடுக்கப்போதுமா என்ன ?

எனவே முடிவெடுக்கும் திறன் கடைசி நிலை , மனிதனாகிய நம்முடைய மூளையைப்போல அந்த எந்திரத்தின் மூளையும் மாறும் நிலை அது.

என்று உங்கள் மொபைல் செயல் படாத பேட்டரியை தானாக கழட்டிவிடுகிறதோ அதுதான் உண்மையான செயற்கை நுண்ணறிவு.

ஆகவே இதுவரை AI ஒரு சிறு குழந்தை தான்.  நீ இன்னும் வளரனும் பாப்பா…

எனவே  உலகம் பரப்பும்  எந்த வதந்திகளையும்  நம்பாமல் நிம்மதியாக இருங்கள் . மாற்றம் வரும் , நாமும் மாறுவோம் . அதற்க்கு சற்று கால அவகாசம் உண்டு.

சா.ரா 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.