சென்னை: வளசரவாக்கம் மண்டலத்தில் இராயல நகரில் அமையப் பற்ற நகர்புறக் காடுகள் திட்டம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இராயல நகரில் உள்ள திறந்த வெளி இட ஒதிக்கீட்டு(OSR) நிலத்தில் காடுகள் வளர்பதற்காக “மியாவாகி முறை”யை மாநகராட்சி நிர்வாகம் ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிகிறது.
மியாவாகி என்னும் ஜப்பானிய முறை
“மியாவாகி முறை” என்பது ஜப்பானிய தாவரவியல் நிபுணர் ‘அகிரா மியாவாகி’ என்பவரால் நாட்டு மரக்கன்றுகளை கொண்டு அடர்ந்த காடுகளை உருவாக்கும் முறை ஆகும்.
இந்த முறையில் மரக்கன்றுகள் அருகருகே நடப்பட்டு பக்கவாட்டில் வளர்ச்சியை குறைத்து மேலிருந்து விழும் சூரிய ஒளியை நோக்கி செடிகளை மேல் நோக்கி வளர்விக்கும் முறை ஆகும்.
வேகமாக காடுகள் வளர்கலாம்
மியாவாகி முறையை பயண்படுத்தினால் நகர்புரக் காடுகள் 20 முதல் 30 வருடக் குறுகிய காலத்தில் வளர அதிக வாய்ப்புகள் உள்ளதாக பல அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதே வழக்கமான முறையில் காடுகளை உருவாக்கினால் 200 முதல் 300 வருடங்கள் வரை ஆகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இராயல நகரில் உருவாக்கப்பட்ட நகர்புறக் காடு திட்டம் குடியிருப்பவர்கள் மற்றும் அரசு சாரா அமைப்புகளின் உதவியை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
புதிய நகர்புற பூங்காக்கள்
நகராட்சி அமைப்பு மேலும் 55 புதிய நகர்புற பூங்காக்களை நகராட்சியின் விரிவு படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் அமைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இத்தகைய செயல்பாடுகளால் சென்னை நகரில் இருக்கும் பூங்காக்களின் எண்ணிக்கை 700க்கும் மேல் அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.