Home விளையாட்டு விளையாட்டு வீரர்களுடன் மோடி பேசி வருகிறார்

விளையாட்டு வீரர்களுடன் மோடி பேசி வருகிறார்

233
0

கொரோனா வைரஸ் விழிப்புணர்வு ஏற்படுத்த விளையாட்டு வீரர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரசிங் மூலம் உரையாடி வருகிறார்.

உலகையே உலுக்கி வரும் ஒரு சொல் கொரோனா வைரஸ். அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி போன்ற நாடுகளை ஸ்தம்பிக்க வைத்துள்ளது.

10 லட்சத்துக்கும் மேற்பட்ட பாதிப்புகளும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இழப்புகளும் ஏற்படுத்தியுள்ளது இந்த கொரோனா வைரஸ்.

இந்தியா பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பிரதமர் மோடி 21 நாள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இதனால் மக்கள் அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே வெளியில் வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இன்று ஏப்ரல் 3ஆம் தேதி காலை 9 மணிக்கு வீடியோ மூலம் மக்களிடம் பேசிய பிரதமர் மோடி வருகிற 5 ஆம் தேதி இரவு 9 மணிக்கு அனைத்து விளக்குகளையும் அனைத்து வைத்து மெழுகுவர்த்தி மற்றும் டார்ச் லைட்டை வீட்டில் ஏற்ற வேண்டும்.

நமது ஒற்றுமையை காட்ட வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

தற்போது விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகள் மற்றும் தடகள வீரர்கள் வீராங்கனைகள் உடன் பிரதமர் மோடி வீடியோ கான்பரசிங் மூலம் ஆலோசித்து.

சச்சின், கங்குலி, யுவராஜ் சிங், பிவி சிந்து, சாய்னா நேவால் போன்றோருடன் பிரதமர் மோடி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

பிரதமர் மோடியிடம் சச்சின் டெண்டுல்கர் நீங்கள் எடுத்துவரும் முன்னெச்சரிக்கைகள் பாராட்டத்தக்கது என்றும் கூறியுள்ளார்.

விளையாட்டு வீரர்களை ரசிகர்கள் சமூக வலைத்தள பக்கங்களில் அதிகமாக பின் தொடர்கிறார்கள்.

இவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினால் இளைஞர்கள் மத்தியில் உடனே சேரும் என்பதற்காக பிரதமர் மோடி ஆலோசித்து வருகிறார்.

Previous articleஹலோவில் டிரெண்டாகும் தமிழ் சினிமாவின் ராணி யார்: நீங்களும் வாக்களியுங்கள்!
Next article‘அல வைகுந்தபுரமுலோ’ தமிழ் ரீமேக்.. போட்டி போடும் கோலிவுட் ஹீரோஸ்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here