சுப்மன் கில் மிரட்டல் காரணமாக புதுமுக நடுவர் நாட் அவுட் கொடுத்ததாக ரஞ்சிக்கோப்பை 2020 தொடரில் விளையாடிய டெல்லி அணியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
ரஞ்சிக்கோப்பை 2020 (Ranji Cup 2019-20)
ரஞ்சிக்கோப்பை கிரிக்கெட் டெஸ்ட் தொடர் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் உள்ளூர் அணிகள், மாநில அணிகள் மோதிக்கொள்ளும். இன்று மொகாலியில் பஞ்சாப்-டெல்லி அணியினர் மோதிக்கொண்டனர்.
சுப்மன் கில் மிரட்டல்
பஞ்சாப் அணியின் துவக்க வீரராக சுப்மன் கில் களம் இறங்கினார். சில பந்துகளே ஆடிய நிலையில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆனார்.
அம்பயர் அவுட் கொடுத்தும் சுப்மன் கில் மைதானத்தை விட்டு வெளியேற மறுத்துவிட்டார். தொடர்ந்து அம்பயருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மிரட்டும் தொனியில் பேசினார்.
புதுமுக நடுவர்
நடுவர் ரபி புதுமுகம், இதுதான் அவருக்கு முதல்போட்டி. எனவே சுப்மன் கில்லின் விடாப்பிடியான வாக்குவாதத்தினால் லெக் அம்பயருடன் ஆலோசனை செய்தார்.
சிறிது நேரம் கழித்து நாட் அவுட் கொடுத்தார். சுப்மன் கில் மீண்டும் ஆடலாம் என கிரீன் சிக்னல் கொடுத்தார் நடுவர் ரபி.
டெல்லி வீரர்கள் அதிருப்தி
நடுவரின் செயலால் அதிருப்தி அடைந்த டெல்லி வீரர்கள் மைதானத்தை விட்டு வெளியேறினர். தொடர்ந்து விளையாட மறுத்தனர்.
இதனால் போட்டியின் மூன்றாம் நடுவர்கள் இந்த விவகாரத்தில் தலையிட்டனர். 15 நிமிடம் ஆட்டம் தடைபட்டது.
ஆட்டம் துவங்கியது
ஒருவழியாக சுப்மன் கில் மீண்டும் விளையாட அனுமதிக்கப்பட்டார். டெல்லி வீரர்கள் சமாதானமாகி மீண்டும் மைதானத்திற்கு வந்தவுடன் ஆட்டம் துவங்கியது.
தொடர்ந்து விளையாடிய சுப்மன் கில் 41 பந்துகளில் 23 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார்.
டெல்லி அணியினர் குற்றச்சாட்டு
போட்டி நேரம் முடிந்தவுடன் புதுமுக நடுவரான ரபி மீது டெல்லி அணியினர் குற்றம் சுமத்தினர். சுப்மன் கில் அவுட் ஆனது உண்மை.
ஆனால் தொடர் வாக்குவாதத்தைக் கண்டு நடுவர் பயந்து, தன் முடிவை மாற்றிக்கொண்டு உள்ளார். நடுவர் ரபியின் செயல் மிகவும் வருத்தம் அளிப்பதாக உள்ளது.
இந்திய அணிக்காக விளையாடிய வீரருக்கு சலுகை அளித்தது எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என அம்பயர் மீது குற்றம் சுமத்தினர்.