“உலகிற்கு ஆபத்து” என்று முன்கூட்டியே கணித்த இளைய ஜோதிடர் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டு மீண்டும் எச்சரிக்கை தந்துள்ளார்.
உலகமே இன்று கொரோனா என்ற வைரஸின் பிடியில் சிக்கி தவித்து வருகிறது. பெரிய வல்லரசு நாடுகள் கூட மருந்துகள் கிடைக்காமல் தவித்து வருகிறது.
இப்படி ஒரு புதிய வைரஸால் உலகிற்கே பாதிப்பு வரும் என ஆகஸ்ட் மாதம் 2019 இல் இளைய ஜோதிடரான அபி௧்ஞா ஆனந்த் கணித்து சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதன்படியே கொரோனா என்ற கொடிய வைரஸ் சீனாவில் உருவாகி உலகத்தை உலுக்கி வருகின்றது.
அவரது கணிப்பில் நவம்பர் 2019 முதல் ஏப்ரல் 2020 வரை உலகிற்கு பேராபத்து என்று கூறியிருந்தார். மேலும் மே மாதம் 31-ஆம் தேதி வரை தீர்வு கிடைக்காது என்று கூறியிருந்தார்.
பின் மீண்டும் ஜூன் மாதம் 31-ஆம் தேதி வரை நல்ல செய்தி கிடைக்காது என மற்றொரு பதிவை போட்டிருந்தார்.
தற்பொழுது அபிக்ஞா ஜோதிடம் கணித்து புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவர் கூற்றுப்படி “இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 20-ஆம் தேதி உலகிற்கு பேரழிவு ஏற்பட போகிறது. அதுமட்டுமின்றி பேரழிவானது மார்ச் 31-ஆம் தேதி வரை நீடிக்கும்” என்று அவரது வீடியோவில் பதிவிட்டுள்ளார்.
மேலும் அது கொரோனாவை விட கொடியதாக இருக்கும். நாம் அனைவரும் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை உட்கொள்ளுதல் அவசியம்.
விலங்குகளை கொல்வதை நிறுத்த வேண்டும். இயற்கை அன்னையை பாதுகாக்க வேண்டும். இயற்கை சமநிலையை அழித்து வீணாக இயற்கை அன்னையின் கோபத்தை தூண்டுவது போல எதுவும் செய்ய வேண்டாம்.
விலங்குகள் வதைப்பதால் நமது கர்ம வினைகளை அதிகரித்து கொண்டு வருகிறோம். தயவு செய்து இறைச்சி கடைக்காரர்கள் தியாகமாக நினைத்து தொழிலை விட வேண்டும் என்று தனது வீடியோவில் கூறியுள்ளார்.
ஜுன் மாசத்துல எப்படா 31 ந் தேதி வந்தது…. பொய்யா இருந்தாலும் ஒரு நியாயம் நீதி வேனாமாடா…..