Home ஜோதிடம் 9/4/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

9/4/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

305
0

9/4/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil; மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்.

மேஷ ராசிபலன்

உங்கள் பொறுமையை சோதிக்கும் படியாக பிரச்சனைகள் வரும். பணியிடத்தில் ஊழியர்களால் மோதல்கள் ஏற்பட வாய்ப்புண்டு.

வீட்டில் அமைதியான சூழல் நிலவாது. பொறுமையாக அனுசரணையோடு செல்ல வேண்டிய நாளாக இருக்கும்.

ரிஷப ராசிபலன்

இன்று உங்களுக்கு பிரியமானவர்களுடன் நேரத்தை செலவிடுவீர்கள். விருந்து போன்ற விழாக்களுக்கு சென்று மகிழ்வீர்கள்.

குடும்பதோடு மகிழ்ச்சிகரமாக இருக்க போகின்ற நாளாக இருக்கும். பணவரவ சிறப்பாக இருக்கும் நாளாகும்.

மிதுன ராசிபலன்

இன்றைய நாள் முழுவதும் வளர்ச்சிகரமாக இருக்கும். பாராட்டுகள் தானாக வந்து சேரப் போகிறது. மன அமைதியுடன் இருப்பீர்கள்.

நண்பர்களின் நல்லாதரவு கிடைக்கும் நாளாக இருக்கும். மொத்ததில் பொன்னான நாளாக இருக்க போகிறது.

கடக ராசிபலன்

இன்று அன்பான அணுகுமுறை தேவையான நாளாகும். பிறரின் மீது வரும் கோபத்தை குறைத்து கொள்ளவும்.

உறவினர்களால் சிறு பிரச்சனைகள் வர வாய்ப்புகள் உண்டு. செரிமானம் தொடர்பான நோய்கள் வரலாம். உணவில் கவனமாக இருக்க வேண்டிய நாளாகும்.

சிம்ம ராசிபலன்

இன்று உங்களின் வளர்ச்சிக்கு சிறு தடைகள் வரலாம். அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும்.

உங்கள் துணையால் இன்று இன்பமாக இருப்பீர்கள். தனலாபம் சுமாராக இருக்கின்ற நாளாகும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கன்னி ராசிபலன் 

இன்று தங்களின் உணர்ச்சிவசத்தை குறைக்க வேண்டும். உங்களுக்கான பணியை திறம்பட செய்வதற்கு வழியை உருவாக்கி கொள்ளவும்.

தங்களை தாங்களே உற்சாகமாக வைத்து கொள்ளுதல் அவசியமாகும். வரவு செலவு சமமாக இருக்க போகின்ற நாளாகும்.

துலா ராசிபலன்

உங்களின் முயற்சி இருந்தால் மட்டுமே இன்று வெற்றி காண இயலும். நாள் முழுவதும் கடினமாக உழைக்க வேண்டிய நாளாகும்.

வீட்டில் உறவுகளோடு பிரச்சனைகள் வர வாய்ப்புண்டு. மனதை குழப்பத்தில் இருந்து வெளி கொண்டு வர தியானம் செய்யுங்கள்.

விருச்சிக ராசிபலன்

இன்று உங்கள் லட்சியத்தை அடைய தயக்கம் ஒன்றே தடையாக இருக்கும். தயக்கத்தை விடுத்து முயற்சிகள் செய்தால் வெற்றி பெறுவீர்கள்.

எதிர்பாராத பணவரவு உண்டு. ஆரோக்கியத்தில் ஒரு குறையும் வராது.

தனுசு ராசிபலன்

இன்று நட்பான அணுகுமுறை தேவையான நாளாகும். வீண் விவாதங்களை தவிர்க்கவும்.

கணவன் மனைவியிடையே புரிந்துணர்வு மேம்படும். தொழில் விருத்தி அடையும் நாளாக இருக்க போகிறது.

மகர ராசிபலன் 

இன்று தங்களின் எதிர்மறையான எண்ணங்களை நீக்குதல் வேண்டிய நாளாகும். பணியிடத்தில் கருத்து வேறுபாடு வருவதற்கு வாய்ப்புகள் உண்டு.

வீணான பேச்சுகளை தவிர்த்து விடுவது நல்லது. கண் பிரச்சனைகள் வர வாய்ப்புகள் உண்டு.

கும்ப ராசிபலன்

இன்று குழப்பமான சூழல் நிலவுகின்ற நாளாக இருக்கும். தங்களை தாங்களே தைரியமாக வைத்து கொள்வது அவசியமாகும்.

துணையிடம் மனம் திறந்து பேசுங்கள் பிரச்சனைகள் தீர வழி பிறக்கும். சுமாரான பலன்களை தரும் நாளாக இருக்கும்.

மீன ராசிபலன் 

இன்று மனம் உற்சாகமாக இருக்க கூடிய நாளாகும். பயணங்கள் லாபகரமான பலன்களை தரும்.

புதிய தொழில் துவங்க உகந்த நாளாக இருக்கும். பணப் புழக்கம் நன்றாக இருக்கும். வெற்றிகரமான நாளாக இருக்கும்.

9/4/2020 ராசிபலன் Daily Horoscope Astrology Tamil Today. இன்றைய ராசி பலன், தின ராசிபலன் ஆகியவற்றை படித்து வளம்பெற மிஸ்டர் புயல் இணையம் சார்பாக வாழ்த்துகிறோம்.

Previous articleடிசம்பர் 2020: உலகிற்கு பேரழிவா? இளைய ஜோதிடரின் புதிய கணிப்பு என்ன?
Next articleதயவு செய்து ஓய்வு பெறுங்கள் முன்னாள் பாகிஸ்தான் வீரர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here