Ghilli; எம்ஜிஆர் சாதனையை முறியடித்த விஜய்யின் கில்லி! விஜய், த்ரிஷா நடிப்பில் வந்த கில்லி படம் திரைக்கு வந்து இன்றுடன் 16 ஆண்டுகள் கடந்துள்ளது.
கில்லி படம் திரைக்கு வந்து இன்றுடன் 16 ஆண்டுகளை கடந்துள்ளது.
இயக்குநர் தரணி இயக்கத்தில் தளபதி விஜய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ் ஆகியோரது நடிப்பில் கடந்த 2004 ஆம் ஆண்டு, ஏப்ரல் 17 ஆம் தேதி திரைக்கு வந்த படம் கில்லி.
ஆக்ஷன் கதையை மையப்படுத்திய இந்தப் படம் திரைக்கு வந்து 200 நாட்களுக்கு மேல் ஓடியது. அதோடு, கில்லி விஜய்யின் சினிமா வரலாற்றில் முக்கியமான படமாக அமைந்தது.
கபடி, காதல் இரண்டுக்கும் முக்கியத்தும் கொடுத்து எடுக்கப்பட்ட இப்படம் திரைக்கு வந்து 16 ஆண்டுகள் ஆகியுள்ளது.
கில்லி திரைக்கு வந்து 16 ஆண்டுகள் ஆன நிலையில் 16YearsOfBlockBusterGhilli என்ற ஹலோ ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.
கில்லி சாதனைகள்:
- தமிழைத் தவிர, கன்னடம், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஒடியா ஆகிய மொழிகளில் கில்லி படம் ரீமேக் செய்யப்பட்டது.
- முதல் முறையாக விஜய் – த்ரிஷா கில்லி படத்தின் மூலம் இணைந்து நடித்தனர். இவர்களது கெமிஸ்டரி இன்றும் பேசப்படுகிறது.
- முதன் முதலில் கில்லி படம் தான் ரூ.50 கோடி தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸ் வசூலில் இணைந்தது.
- ஆனால், ரஜினிகாந்தின் படையப்பா படம் வெளியாகி 5 ஆண்டுகள் ஆன நிலையில் தான் தமிழகத்தில் மட்டும் ரூ.30 கோடி வசூல் செய்தது.
- ஆனால், விஜய் படம் வெளியாகி ரூ.50 கோடி வசூல் செய்து ரஜினியின் சாதனையை முறியடித்தது.
- கடந்த 2010 ஆம் ஆண்டு நடந்த ஆசிய கபடி விளையாட்டு போட்டியின் இறுதிப் போட்டியில் கபடி கபடி என்ற பாடல் ஒலிக்கப்பட்டது.
- எம்ஜிஆர் நடித்த அடிமைப்பெண் படத்தை முதல் வாரத்தில் பார்த்த ரசிகர்களை விட விஜய்யின் கில்லி படத்தை அதிக ரசிகர்கள் பார்த்துள்ளனர்.
- 200 நாட்களுக்கும் மேலாக ஓடிய படம் கில்லி.
- மதுரையில் அதிக நாடிகள் ஓடிய அதோடு உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் சாதனையை விஜய்யின் கில்லி படம் முறியடித்துள்ளது.
- இன்றும் டிஆர்பியில் முதலிடம் பிடித்துள்ளது கில்லி.
- கில்லி படத்தில் உள்ள அப்படி போடு பாடல் இந்தியா முழுவதும் ஹிட் கொடுத்தது.
- தான் ஃபாக்ஸ் ஆபிஸ் கிங் என்று விஜய் நிரூபித்துள்ளார்.
படம் மட்டும் ஹிட் கொடுக்கவில்லை படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் ஹிட் கொடுத்துள்ளன. ஒவ்வொரு வசனமும் ரசிகர்களை வியக்க வைக்கும் அளவிற்கு அமைந்துள்ளது.
தற்போது கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக கில்லி படம் மீண்டும் ஒளிபரப்பு செய்யப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கில்லி படம் சன் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், கில்லி படம் வெளியாகி 16 ஆண்டுகள் ஆன நிலையில், ஹலோவில் 16YearsOfBlockBusterGhilli என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.