Home சினிமா கோலிவுட் விஜய்க்கு போன் செய்து சஞ்சய் பற்றி விசாரித்த தல அஜித்!

விஜய்க்கு போன் செய்து சஞ்சய் பற்றி விசாரித்த தல அஜித்!

414
0
Vijay And Ajith

Vijay; விஜய்க்கு போன் செய்து சஞ்சய் பற்றி விசாரித்த தல அஜித்! கனடா நாட்டில் படித்து வரும் விஜய்யின் மகன் சஞ்சய் பற்றி விஜய்க்கு போன் செய்து தல அஜித் நலம் விசாரித்துள்ளார் என்று தகவல் வெளியாகி வருகிறது.

விஜய்க்கு போன் செய்து அவரது மகன் சஞ்சய் எப்படி இருக்கிறான் என்பது குறித்து அஜித் நலம் விசாரித்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் உச்சநட்சத்திரங்களாக இருப்பது அஜித் மற்றும் விஜய். இவர்களது படங்கள் வெளிவந்தால் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.

அஜித் படம் வந்தால் விஜய் ரசிகர்கள் விமர்சிப்பதும், மோதிக் கொள்வதும், விஜய் படம் வந்தால் அஜித் ரசிகர்கள் விமர்சிப்பதும், மோதிக் கொள்வதும் காலம் காலமாக நடந்து வருகிறது.

ரசிகர்கள் மோதிக் கொண்டாலும், அஜித், விஜய் எப்போதும் நண்பர்களாகத்தான் இருக்கிறார்கள். ஒருவருக்கொருவர் பெருமையாக பேசிக் கொள்வதும் நடந்து வருகிறது.

அண்மையில், மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் அஜித்தைப் போன்று உடை அணிந்து வரவேண்டும் என்பதற்காகத்தான் இப்படி கோட் சூட்டில் வந்ததாக விஜய் கூறினார்.

இந்த நிலையில், தற்போது விஜய்க்கு போன் செய்த அஜித், சஞ்சய் எப்படி இருக்கிறான் என்று நலம் விசாரித்துள்ளார் என்று செய்தி பரவி வருகிறது.

படிப்பை முடித்து விட்டு விஜய் மகன் சஞ்சய், குறும்படங்களை இயக்கி வந்தார். அதில், நடிக்கவும் செய்திருந்தார்.

இந்த நிலையில் சினிமா தொடர்பாக படிப்பதற்காக சஞ்சய் கனடா சென்றிருந்தார். தற்போது உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் வெளிநாட்டிலிருந்து இந்தியா திரும்பவும், இந்தியாவிலிருந்து வெளிநாட்டிற்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டிருந்தது.

கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன் விளைவாக சஞ்சய் நாடு திரும்ப முடியவில்லை. இதை நினைத்து விஜய் ஒவ்வொரு நாளும் கவலை அடைந்து வருவதாக தகவல் வந்தது.

தினமும் சஞ்சய்க்கு போன் செய்து எப்போதும் தனிமையில் இருக்குமாறும், வெளியில் செல்ல வேண்டாம் என்றும் விஜய் அறிவுரை வழங்கி வருகிறார்.

இந்த தகவல் சமூக வலைதளங்களிலும் மீடியாவிலும் வெளியானது. இது குறித்து அஜித்தும் அறிந்துள்ளார்.

உடனடியாக விஜய்க்கு, தல அஜித் போன் செய்துள்ளார். அப்போது, சஞ்சய் எப்படி இருக்கிறான்? கனடாவில் இன்றைய சூழல் எப்படி இருக்கிறது? என்று அஜித் கேட்டுள்ளாராம்.

இதற்கு பதிலளித்த விஜய், சஞ்சய் பாதுகாப்பாக இருக்கிறான், பயப்படும்படி எதுவுமில்லை என்று கூறியுள்ளாராம்.

இது போன்று அஜித் – விஜய் இருவரும் அடிக்கடி செல்போனில் பேசிக் கொள்வார்கள் என்று நெருங்கிய வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

SOURCER SIVAKUMAR
Previous articleகொரோனாவை வென்று குணமடைந்தவர்களின் உணர்ச்சிகரமான தகவல்கள்
Next articleஎம்ஜிஆர், ரஜினிகாந்த் சாதனையை முறியடித்த விஜய்யின் கில்லி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here