படுத்து புரண்டு சிக்சர் அடித்த டிவில்லியர்ஸ்; ஆர்சிபிக்கு ஆப்பு வைத்த அம்பயர்
IPL 2019 இதுவரை நடந்த போட்டியில் நேற்றைய போட்டி தான் அதிரடிக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சம் இல்லாமல் நடைபெற்றது.
டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் பவுலிங் செய்யத் தீர்மானித்தது. முதலில் பேட் செய்த மும்பை ஆரம்பம் முதலே அசத்தல்.
மும்பையின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் கொடுத்த எளிதான கேட்சை ஆர்சிபி வீரர் தவறவிட்டுவிட்டார்.
இதனால் முதல் 5 ஓவருக்கு விக்கெட் கிடைக்கவில்லை. ரோஹித் சர்மா 48, ஹார்த்திக் பாண்ட்யா 32, சூரிய குமார் 38, யுவராஜ் சிங் 23 ரன்கள் குவித்தனர்.
யுவராஜ் சிங் ஹாட்ரிக் சிக்ஸர் பறக்கவிட்டு ரசிகர்கள் கண்களுக்கு விருந்து வைத்தர். அதே ஓவரில் ஆறு சிக்ஸர்கள் பறக்கவிட நினைத்து மீண்டும் ஒரு சிக்சர் அடிக்க நூலிழையில் எல்லைக்கோட்டுக்கு உள்ளே கேட்ச் ஆனார்.
ஒரு பக்கம் விக்கெட் மறுபக்கம் சிக்சர் என்ற மும்பை அணியினர் ஆர்சிபி பவுலர்களை பொறித்து எடுத்துவிட்டனர். ஹார்த்திக் பாண்ட்யா அதிக மீட்டர் சிக்ஸர் அடித்து ஆர்ம்ஸ்யை காட்டி மைதானத்தை அதிரவிட்டார்.
இறுதியாக மும்பை அணி 20 ஓவருக்கு 8 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் அடித்தனர். பின்னர் களம் இறங்கிய ஆர்சிபி அணியின் பார்த்திவ் 31, விராட் 46, டிவில்லியர்ஸ் 70 ரன்களைக் குவித்தனர்.
ஆர்சிபி அணியில் இந்த மூவரைத் தவிர மற்ற வீரர்களில் பேட்டிங் மோசமாகவே இருந்தது. 50-யைத் தவறவிட்ட விராட் கோலி 5000 ரன்களை கடந்த இரண்டாவது ஐபிஎல் வீரர் என்ற சிறப்பைப் பெற்றார்.
அதே போன்று இந்தப்போட்டியில் படுத்து புரண்டு எல்லாம் சிக்சர் அடித்த டிவில்லியர்ஸ் 4000 ரன்களைக் கடந்த வீரர் என்ற சிறப்பை பெற்றார்.
இறுதி ஓவரில் கடைசி பந்தை டூபே எதிர்கொண்டார் அந்த பந்தில் அவரால் சிக்சர் அடிக்க முடியவில்லை. இருப்பினும் அந்தப்பால் நோ பால்.
ஆனால் அதை அம்பயரும் கவனிக்கவில்லை. அருகில் நின்ற டிவில்லியர்ஸும் கவனிக்கவில்லை. ஒருவர் கவனித்திருந்தால் கூட மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கும்.
மொத்தத்தில் வெற்றிபெறும் நிலையில் இருந்த ஆர்சிபி தோல்வியைத் தழுவியது. ஆட்டநாயகன் விருதை மூன்று விக்கெட் எடுத்து 20 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்த பும்ரா கைப்பற்றினார்.