2004 ஆம் ஆண்டு இதே நாளில் பாகிஸ்தான் மண்ணில் பாகிஸ்தானுக்கு எதிராக டெஸ்ட் போட்டிகள் தனது முதலாவது மிச்சத்தை எடுத்து வரலாறு படைத்த வீரேந்திர சேவாக்.
2004 ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5ஒருநாள் போட்டி மற்றும் மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது.
முதலில் நடந்த ஒருநாள் தொடரை 3-2 என்ற கணக்கில் இந்தியா பாகிஸ்தானை வென்றது.
அடுத்து மார்ச் 28ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டி முல்தான் மைதானத்தில் ஆரம்பமானது. டாஸ் வென்ற இந்தியா கேப்டன் ராகுல் டிராவிட் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.
தொடக்க ஆட்டக்காரர்களாக சேவாக் மற்றும் சோப்ரா களமிறங்கினார்கள். இருவரும் இணைந்து 160 ரன்கள் சேர்த்தனர் இவர்களை பிடிக்க பாகிஸ்தான் அணி 40 ஓவர்கள் எடுத்துக்கொண்டது ஆகாஷ் சோப்ரா.
அடுத்து வந்த கேப்டன் டிராவிட் 6 ரன்களில் வெளியேற நான்காவது வீரராக களமிறங்கினார் சச்சின் டெண்டுல்கர்.
சச்சின் டெண்டுல்கர் மற்றும் சேவாக் இருவரும் இணைந்து பாகிஸ்தான் பந்து வீச்சை வெளுத்து வாங்கினார்கள். இருவரையும் பிரிக்க முடியாமல் பாகிஸ்தான் அணி திணறியது.
முதல்நாள் ஆகாஷ் சோப்ரா மற்றும் ராகுல் டிராவிட் விக்கெட்டை மட்டுமே பாகிஸ்தானால் எடுக்க முடிந்தது.
முதல் நாள் முடிவில் இந்தியா 2 விக்கெட் இழப்பிற்கு 356 ரன்கள் எடுத்திருந்தது. சேவாக் முதல் நாளிலேயே இரட்டை சதமடித்து 228 ரன்களுடனும், சச்சின் 60 ரன்களில் களத்தில் நின்றனர்
மார்ச் 29ஆம் தேதி இரண்டாவது நாள் ஆட்டத்தை இந்திய தொடங்கியது உணவு இடைவேளைக்கு முன்பே சேவாக் தன்னுடைய முதலாவது முச்சதத்தை எடுத்து வரலாறு படைத்தார்.
இந்தியாவின் முதல் முச்சதம் எடுத்த வீரரானார். ஒருநாள் போட்டியில் அதிரடிக்கு பெயர் போன சேவாக் டெஸ்ட் போட்டியின் விட்டுவைக்கவில்லை.
ஒருநாள் போட்டியை டி20 போலவும், டெஸ்ட் போட்டியை ஒருநாள் போட்டி போலவும் ஆடும் அதிரடி வீரர் சேவாக், பாகிஸ்தானின் முச்சதம் அடித்த இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார்.
டெஸ்ட் வரலாற்றில் இவர் அடித்த முச்சதம் பதினெட்டாவது முச்சதம் ஆகும். டெஸ்ட் போட்டிகளில் முச்சதம் அடித்த 17ஆவது வீரராவார்.
இரண்டு முறை முச்சதம் அடித்த மூன்றாவது வீரர் வீரேந்திர சேவாக் (பிராட்மேன், பிரைன் லாரா).
இறுதியில் சேவாக் 375 பந்துகளில் 309 ரன்கள் எடுத்தார்.
இந்திய அணி 675 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது இருந்தது. சச்சின் 194 ரன்களுடன் களத்தில் நின்றார். இன்னும் ஆறு ரன்கள் எடுத்தால் இரட்டை சதம் அடிக்கும் வாய்ப்பு இருந்தது.
ராகுல் திராவிட் ஆட்டத்தை டிக்ளேர் செய்தார். இது மிகப் பெரிய சர்ச்சையானது. சச்சினுக்கு இது சிறிதும் விருப்பம் இல்லாமல் இருந்தது.
இறுதியில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 407 மட்டுமே எடுத்தது. இந்தியா பாகிஸ்தானுக்கு பாலோ ஆன் வழங்கியது.
268 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் 216 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதனால் இந்திய அணி 52 ரன்கள் மற்றும் இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருதை வீரேந்திர சேவாக் என்றார்