Home வரலாறு தென்னாப்பிரிக்காவின் உலக கோப்பை கனவை தகர்த்த மழை

தென்னாப்பிரிக்காவின் உலக கோப்பை கனவை தகர்த்த மழை

344
0

தென் ஆப்பிர்க்கா அணி மழையால் ஒரு பந்தில் 22 ரன்கள் அடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு, இங்கிலாந்திடம் தோல்வி அடைந்த நாள் இன்று.

1992 உலககோப்பை

1992 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து உலக கோப்பையில் நடத்தியது.

1989 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா உலகக்கோப்பையை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

1909 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா ஐசிசி கிரிக்கெட் அந்தஸ்தை பெற்றது அன்றிலிருந்து இன்றுவரை ஐசிசி நடத்திய எந்த ஒரு கோப்பையை வென்றது இல்லை.

ஜாம்பவான் தென் ஆப்பிரிக்கா

ஒரு நாள், டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் ஜாம்பவானாக வலம் வந்து கொண்டிருக்கும் தென்ஆப்பிரிக்க அணியில் ஒரு முறை கூட ஐசிசி நடத்தும் கோப்பையை வெல்ல முடியாதது அந்த அணிக்கு தொடர் சோகமாகவே உள்ளது.

தென்னாபிரிக்க அணி கிரீம் ஸ்மித், ஷான் பொல்லாக், நீக்கி போஜி, குரோஞ்சி, லேன்ஸ் குலுசினர், நீட்டினி, கீப்ஸ், காலிஸ், ஜான்டி ரோட்ஸ் போன்ற வீரர்கள் விளையாடியும் அந்த அணியால் இன்றுவரை கோப்பையை வெல்ல முடியவில்லை.

1992 ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பையில் பாகிஸ்தான், நியூசிலாந்து, இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, வெஸ்ட்இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஜிம்பாப்வே என 9 அணிகள் பங்கு பெற்றது.

லீக் போட்டிகளில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.

அரையிறுதி போட்டிகள்

அதில் புள்ளிப் பட்டியலில் நியூசிலாந்து அணி 8 போட்டிகளில் 7 வெற்றி பெற்று முதலிடத்திலும், இங்கிலாந்து அணி ஐந்து வெற்றி பெற்று இரண்டாவது இடத்திலும், தென்னாபிரிக்க அணி 5 வெற்றி பெற்று மூன்றாவது இடத்திலும் பாகிஸ்தான் அணி 4 வெற்றி பெற்று அரையிறுதிக்கு நான்கு அணிகளும் தகுதி பெற்றது.

முதல் அரையிறுதிப் போட்டியில் நியூஸிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணி மோதின.

இன்சமாம் உள் ஹாக் 37 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து பாகிஸ்தான் அணி நியூசிலாந்து அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்த உதவினார்.

இரண்டாவது அரையிறுதி போட்டி மார்ச் 22ஆம் தேதி சிட்னி மைதானத்தில் இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணி மோதின.

இங்கிலாந்து 252 ரன்கள்

தென்ஆப்பிரிக்கா அணி கேப்டன் வெஸல்ஸ் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார்.

மழை குறுக்கிட்டதால் அந்த போட்டி 45 ஓவர்களாக குறைக்கப்பட்டு இங்கிலாந்து அணி பேட்டிங்கை ஆடியது.

இங்கிலாந்து அணி 45 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 252 ரன்கள் எடுத்தது அந்த அணியில் அதிகபட்சமாக கிக் 83 ரன்கள், ஸ்டீவாட் 33 ரன்கள், பேர்பிரதர் 28 ரன்கள், ரிவி 25 ரன்கள் எடுத்தனர்.

தென் ஆப்பிரிக்கா தரப்பில் டொனால்ட் மற்றும் பிரிங்கிலே தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தென் ஆப்பிரிக்காக்கு சோகம்

45 ஓவர்களில் 253 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி, 42.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 231 ரன்கள் எடுத்திருந்தது.

களத்தில் ரிச்சர்ட்ச்சன் 13 ரன்களுடனும் மெக்மில்லன் 21 ரன்களுடன் இருந்தனர்.

தென்னாப்பிரிக்கா அணிக்கு 13 பந்துகளில் 22 ரன்கள் தேவையாக இருந்த பொழுது மழை மீண்டும் குறுக்கிட்டு ஆட்டத்தை நிறுத்தியது.

சிறிதுநேரத்தில் மழைவிட நடுவர்கள் ஆட்டத்தை ஓவர்களை குறைக்கலாம் என்று முடிவெடுத்தார்கள்.

இங்கிலாந்து வெற்றி

நடுவர்கள் எடுத்த முடிவில் தென்ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற ஒரு பந்தில் 22 ரன்கள் எடுக்க வேண்டும் என்று நிர்ணயித்தார்கள்.

இது சாத்தியமே இல்லாத ஒன்று என்றாலும் கிரிக்கெட் விதிமுறைகளுக்கு உட்பட்டு இந்த முடிவை நடுவர்கள் எடுத்தார்கள்.

மீண்டும் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி ஒரு பந்தில் 1 ரன் மட்டுமே எடுக்க சோகத்துடன், டிஎல் முறைப்படி 19 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோல்வி அடைந்தார்கள்.

ஒரு பந்தில் 20 ரன்கள் எடுக்க வேண்டும் என்று மைதானத்தில் உள்ள தொலைக்காட்சியில் பார்த்தவுடனே தென் ஆப்பிரிக்க ரசிகர்கள் அனைவரும் சோகத்தில் மூழ்கினார்கள்.

தென்னாப்பிரிக்கா அணி 43 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 232 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அந்த அணியில் அதிகபட்சமாக ஹட்ஸன் 46 ரன்கள், ஜான்டி ரோட்ஸ் 43 ரன்கள், குய்ப்பர் 36 ரன்கள் எடுத்தனர். இங்கிலாந்து தரப்பில் இல்லிங் வொர்த் மற்றும் ஸ்மால் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

தென்ஆப்பிரிக்கா அணி கண்டிப்பாக இந்த முறை உலகக்கோப்பையை வென்று விடும் என்று நம்பி இருந்த அந்த நாட்டு ரசிகர்களை மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியது இந்த முடிவு.

வரலாறு படைக்குமா?

வரலாற்றிலேயே இதுவே முதல் முறை இது மாதிரி டக்வெர்த் முறை. அன்றைய சோகம் இன்று வரை தென் ஆப்பிரிக்காவிற்கு தொடர்ந்துகொண்டிருக்கிறது.

அரையிறுதிக்கு நுழையும் தென்னாப்பிரிக்கா அணியால் இறுதிப்போட்டிக்கு இதுவரை நுழைந்ததே இல்லை.

வருகிற அக்டோபர் மாதம் டி20 உலகக்கோப்பை நடக்க உள்ள நிலையில் தென்ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்று இந்த சோகமான சாதனைக்கு முற்றுப்புள்ளி வைத்து வரலாறு படைக்குமா பொறுத்திருந்து பார்ப்போம்.

Previous articleஅதிர்ச்சி ரிப்போர்ட் : கொரோனா வைரஸ் எத்தனை நாள் வாழும்
Next articleகொரோனாவால் wwe wrestlamania நடைபெறுமா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here