2016 ஆம் ஆண்டு இதே நாளில் இந்தியாவை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி டி20 உலகக் கோப்பையை வென்றது இலங்கை அணி.
2016 டி20 உலககோப்பை
2016ஆம் ஆண்டு வங்கதேசத்தில் நான்காவது டி20 உலகக்கோப்பை நடைபெற்றது அதில் பங்குபெற்ற 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டனர்.
குரூப் ஏ பிரிவில் இலங்கை, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, இங்கிலாந்து, நெதர்லாந்து அணிகள் பங்கு பெற்றது.
குரூப் பி யில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்கதேசம் அணிகள் பங்கு பெற்றது.
அரையிறுதி போட்டிகள்
குரூப் ஏ பிரிவில் இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
குரூப் பி ல் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
முதல் அரையிறுதி போட்டிகள் இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின.
மழை குறுக்கிட்டதால் டிஎல் முறைப்படி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை இலங்கை அணி வீழ்த்தியது.
இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்தியாவும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.
விராட் கோலி அதிரடியால் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தியது.
இறுதி போட்டி
2016 ஆம் ஆண்டு ஏப்ரல் 6-ஆம் தேதி டாக்காவில் உள்ள ஷேர் இ பங்களா தேசிய மைதானத்தில் 25 ஆயிரம் ரசிகர்கள் மத்தியில் இறுதிப் போட்டி ஆரம்பமானது.
டாஸ் வென்ற இலங்கை கேப்டன் லசித் மலிங்கா பந்து வீச்சை தேர்வு செய்தார்.
இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரரான ரோகித் மற்றும் ரகானே களம் இறங்கினார்கள்.
இந்தியா ஆமை ஆட்டம்
ரஹானே 3 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த வீராட் கோலியுடன் ரோகித் கூட்டணி அமைத்து விளையாடினார்.
ரோகித் சர்மா 26 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
யுவராஜ் சோதனைகள்
இது உடன் வீராட்கோலி கூட்டணி அமைத்தார். விராட் கோலி ஒருபுறம் ரன்களைச் சேர்க்க யுவராஜ் சிங் நிதானத்தை கடைப் பிடித்தார்.
யுவராஜ் சிங் டி20 விளையாடாமல் டெஸ்ட் போட்டி போல விளையாடி சோதித்தார்.
அடுத்ததாக களமிறங்க தோனி, ரெய்னா, ஜடேஜா போன்ற அதிரடி வீரர்கள் இருந்தும். யுவராஜ் தனது ஆட்டத்தில் எந்த ஒரு ஆக்ரோஷம் இல்லாமல் விளையாடினார். மிகவும் பொறுப்பற்ற ஆட்டமாக இருந்தது.
விராத் கோலிக்கும் பேட்டிங் செய்ய வாய்ப்பும் தராமல் ரன்களும் சேர்க்காமல் விளையாடியது இந்திய ரசிகர்களை பொறுமையை சோதித்தது.
இறுதியில் யுவராஜ்சிங் 21 பந்துகளில் 12 ரன்கள் சேர்த்து வெளியேறினார். அடுத்து வந்த தோனி 7 பந்துகளில் 4 ரன்கள் சேர்த்தார்.
இந்தியா 130
இறுதியில் இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் எடுத்தது. விராத் கோலி அதிகபட்சமாக 77 ரன்கள் சேர்த்தார்.
இலங்கை அணி தரப்பில் குலசேகரா மேத்யூஸ் ஹேராத் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
இது ஒரு இறுதி ஆட்டத்தில் வெற்றி எனக்கு இது போதுமானது அல்ல.
இலங்கை வெற்றி
134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இலங்கை அணி 17.4 ஓவர்களில் 134 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.
இலங்கை அணியில் அதிகபட்சமாக சங்ககரா 52 ரன்கள், ஜெயவர்தனே 24 ரன்கள், திசாரா பெரேரா 23 ரன்கள், திலகரத்ன தில்ஷன் 18 ரன்கள் எடுத்தனர்.
நான்காவது டி20 உலக கோப்பை சாம்பியன் பட்டத்தை இலங்கை அணி சூடியது. இதற்கு முன்னால் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகள் வென்றிருந்தது.
இந்த உலக கோப்பையில் சங்கக்கார மற்றும் ஜெயவர்த்தனே இருவருக்கும் கடைசி டி20 போட்டி ஆகவே அமைந்தது.
இந்த உலக கோப்பையில் ஜெயவர்த்தனே 24 ரன்கள் சேர்த்தது மூலம் டி20 உலகக்கோப்பை போட்டிகளில் ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் ஆவார்.
ஆட்டநாயகன் விருதை குமார் சங்கக்கார வென்றார். உலக கோப்பையை லசித் மலிங்கா பெற்றுக்கொண்டார்.
இந்த போட்டிக்கு பிறகு யுவராஜ் சிங் மேல் பல விமர்சனங்கள் எழுந்தன. அணியை விட்டு நீக்கப்பட்டார். அதன் பிறகு அவர் அணியில் ஓரிரு போட்டிகளில் மட்டுமே இடம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.