Home நிகழ்வுகள் பும்ராவிற்கு ஓய்வு அளிக்க வேண்டும் என ரசிகர்கள் ட்விட்டரில் வேண்டுகோள்

பும்ராவிற்கு ஓய்வு அளிக்க வேண்டும் என ரசிகர்கள் ட்விட்டரில் வேண்டுகோள்

411
0
பும்ராவிற்கு ஓய்வு

பும்ராவிற்கு ஓய்வு அளிக்க வேண்டும் என ரசிகர்கள் ட்விட்டரில் வேண்டுகோள்

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரைக் கருத்தில் கொண்டு பும்ராஹ்விற்கு ஐ.பி.எல் தொடர் முழுவதிலும் இருந்து ஓய்வு வழங்க வேண்டும் என சமூக வலைதளங்களில் இந்தியக் கிரிக்கெட் ரசிகர்கள் வேண்டுகோளை முன்வைக்கின்றனர்.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இன்னும் இரண்டு மாதத்தில் துவங்க உள்ள நிலையில் பும்ரா இப்படி விசப்பரீட்சை செய்வது நல்லதல்ல என்று தெரிவித்து வருகின்றனர்.

ரிஷப் பண்ட் அடித்த பந்தை பும்ரா தடுக்க முயன்ற பொழுது தோள்பட்டையில் காயமானது என்பது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/dhonirohitfan1/status/1109858689324744704

போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. பேட்டிங் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் மும்பை பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர்.

குறிப்பாக ரிஷப் பண்ட் வெறும் 27 பந்துகளில் 7 சிக்ஸர் மற்றும் 7 பவுண்டரிகளுடன் 78 ரன்கள் அடித்து மாஸ் காட்டினார். இதன்மூலம், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 214 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மும்பை அணி 19.2 ஓவர்களில் 176 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. கையில் ஏற்பட்ட காயம் காரணமாக பும்ரா பேட் செய்ய வரவில்லை. இதன் மூலம் டெல்லி அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

மும்பை தரப்பில் யுவராஜ் சிங் மட்டும் அரைச்சதம் அடித்தார். மற்ற யாரும் சிறப்பாக செயல்படாததால் மும்பை தோற்றது.

ரசிகர்களின் கருத்துகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here