டெஸ்ட் வரலாற்றில் 56 பந்தில் சதம் அடித்து 28 ஆண்டுகால சாதனையை கிரிக்கெட் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸ் நிகழ்த்திய நாள் இன்று.
1986ஆம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது.
ஐந்தாவது டெஸ்ட் போட்டி ஏப்ரல் 11-16ஆம் தேதி வரை நடைபெற்றது.
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பில்டிங்கை தேர்வு செய்தது.
வெஸ்ட் இண்டீஸ் அணி அனைத்து விக்கெட்டையும் இழந்து 474 ரன்கள் எடுத்தது.
முதல் இன்னிங்சில் 26 ரன்களுக்கு தனது விக்கெட்டை பறிகொடுத்தார் விவியன் ரிச்சர்ட்ஸ்.
அடுத்து முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 310 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
164 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை வெஸ்ட் இண்டீஸ் அணி களம் இறங்கியது.
ஹைனஸ், ரிச்சர்ட்சன், ஹார்பர் மூவருடன் மாற்றிமாற்றி கூட்டணி வைத்த விவியன் ரிசார்ட்ஸ் ஏப்ரல் 15ஆம் தேதி இதேநாளில் 56 பந்துகளில் சதமடித்தார்.
டெஸ்ட் போட்டி குறைந்த பந்துகளில் சதமடித்து சாதனையை நிகழ்த்தினார்.
இந்த சாதனை 28 ஆண்டுகளுக்கு மேல் நீடித்தது. இந்த சதத்தில் 7 சிக்சர்கள் 7 பவுண்டரிகள் அடங்கும்.
இறுதியாக 58 பந்துகளில் 110 ரன்களுடன் களத்தில் நின்றார். இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 240 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது.
குறைந்த பந்தில் சதம் அடித்த விவியன் ரிச்சர்ட்ஸ் சாதனையை 2014ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மிஸ்பா உல் ஹக் சமன் செய்தார்.
அவரும் 56 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். இவர்களின் இந்த சாதனையை 2015ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பிரண்டன் மெக்கல்லம் முறியடித்தார்.
அவர் 51 பந்துகளில் சதமடித்து இன்றுவரை ஐந்தாண்டுகளாக முறியடிக்க முடியாத சாதனையாக வைத்துள்ளார்.
நாளை இந்த சாதனையை முறியடிக்கபடலாம். ஆனால் 34 வருடங்களுக்கு முன்பு இதே நாளில் அடிக்கப்பட்ட விவியன் ரிச்சர்ட்ஸ் சாதனை தான் இதற்கு ஒரு ஆரம்பம்.