மகளிர் உலககோப்பை 2020 இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா இந்தியா அணி? WWCT20I semifinal match india women vs england women. அரையிறுதி போட்டி.
7வது இருபது ஓவர் மகளிர் உலககோப்பை 2020 ஆஸ்திரேலியாவில் கடந்த 21ஆம் தேதி தொடங்கியது.
பத்து அணிகள் பங்கு பெற்று இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பிரிவு-ஏ வில் ஆஸ்திரேலியா, இந்தியா, வங்கதேசம், இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளும்,
பிரிவு – பி யில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, மேற்கு இந்திய தீவுகள், தாய்லாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளும் லீக் போட்டியில் விளையாடியது
பிரிவு ‘ஏ’ வில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் பிரிவு ‘பி’யில் இங்கிலாந்து மற்றும் தென் தென்னாப்பிரிக்கா அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
லீக் போட்டியில் இந்தியா 4 போட்டிகளிலும் வென்று புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்தது. WWCT20I Updates;
அரையிறுதி போட்டிகள்
நாளை மார்ச் 5 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு சிட்னி மைதானத்தில் இங்கிலாந்து அணியை இந்திய அணி (india women vs england women) முதல் அரையிறுதியில் எதிர்கொள்கிறது.
அதே மைதானத்தில் மதியம் 1.30 மணிக்கு ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்க அணியை இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் எதிர்கொள்கிறது.
இந்த உலகக்கோப்பையில் தோல்வியை சந்திக்காமல் வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கும் இந்திய அணி.
இந்தியாவின் பேட்டிங் மற்றும் பவுலிங்
ஷாபாலி வர்மாவை தவிர மற்ற வீரர்கள் ரன்கள் சேர்க்க திணறி வருகிறார்கள்.
இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவர் இந்த உலக கோப்பையில் பேட்ஸ்மேனாக பெரிதும் சோபிக்கவில்லை. சொற்ப ரன்கள் எடுத்து அவுட் ஆகி வெளியே ஆகிறார் .
ஸ்மிருதி மந்தனா, ரோட்டரிஹுஸ், ஷாபாலி வர்மா வீரர்களை தவிர மற்ற வீரர்கள் ரன் சேர்க்க சிரமப்படுகிறார்கள்.
இதில் ஷாபாலி வர்மா, சேவக் போல அதிரடியாக ஆடி, குறைந்த பந்துகளில் அதிக ரன்கள் சேர்த்து வருகிறார். இந்திய அணி பார்ட்னர்ஷிப் அமைப்பதில் கடினம் கொள்கிறது.
இந்திய அணி இந்த உலக கோப்பையை 80% பந்துவீச்சால் மட்டுமே அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
முதல் இரண்டு விக்கெட்டுகள் விழுந்தால் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுப்பது தான் பரிதாபம். இது பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடியை கொடுக்கிறது.
சுழற்பந்து வீச்சாளர்கள் எதிரணிகளை அச்சுறுத்தி பந்து வீசுவது இந்தியாவின் பலம். எதிரணியினரை ரன் சேர்க்க விடாமல் திணற செய்து வருகிறார்கள்.
இங்கிலாந்தின் பலம்
இங்கிலாந்து அணியை பொருத்தவரை தான் விளையாடிய 4 லீக் போட்டிகளில் தென் ஆப்பிரிக்க அணியிடம் மட்டுமே தோல்வியடைந்தது.
மற்ற 3 போட்டிகளில் வெற்றி அடைந்தது. அவர்களிடம் வேயிட்,சிவைர், ஹீதர் நைட், ஜோன்ஸ், பிரான் வில்சன் போன்ற அதிரடி பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.
இவர்களும் பந்துவீச்சில் பலமாகவே உள்ளனர் கடந்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் இவர்கள் அற்புதமாக பந்து வீசியது குறிப்பிடத்தக்கது.
நாளை இந்த போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது சுவாரஸ்யமாகவே உள்ளது.
மற்றோரு போட்டி
மற்றுமொரு போட்டியில் பலமாக ஆஸ்திரேலிய அணி, தென்னாப்பிரிக்க அணியை எதிர்கொள்கிறது.
தென் ஆப்பிரிக்க அணி தான் விளையாடிய நான்கு லீக் போட்டிகளில் மூன்று வெற்றியும் ஒரு போட்டி மழை குறுக்கிட்டு முடிவில்லாமல் போனது.
தென் ஆப்பிரிக்க அணி இந்த உலக கோப்பையில் அசுர பலத்துடன் களம் இறங்கியுள்ளது. அந்த அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சிலும் சிறப்பாக விளையாடி வருகிறது.
ஆஸ்திரேலிய அணி சொந்த மண்ணில் விளையாடுவதால் அதற்கு கூடுதல் பலமே, இருந்தபோதும் இந்திய அணியுடனான முதல் லீக் போட்டியில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த மைதானம் ஆஸ்திரேலியா அணிக்கு சாதகமாகவே உள்ளது ஆஸ்திரேலியா. அணியின் நட்சத்திர வீரர் எலிஸ் பெரி உலக கோப்பையில் இருந்து காயம் காரணமாக விலகியுள்ளார்.
இது சிறிய பின்னடைவாகவே கருதப்படுகிறது. மற்றபடி ஆஸ்திரேலியா பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் பலமாகவே உள்ளது. இந்த அணியின் பலவீனமாக இந்தியாவைப் போல் பார்ட்னர்ஷிப் அமைத்து பேட்டிங் செய்யாதது.
இது மட்டும் சிறிய பின்னடைவு மற்றபடி சொந்த மண்ணில் விளையாடுவதால் இந்த போட்டியும் விறுவிறுப்பிற்கு பஞ்சமிருக்காது என்பதில் சந்தேகமே இல்லை.