Home சினிமா கோலிவுட் Master Audio Launch: ரசிகர்கள் வர வேண்டாம்: விஜய் முடிவு!

Master Audio Launch: ரசிகர்கள் வர வேண்டாம்: விஜய் முடிவு!

1764
0
Master Audio Launch

Master Audio Launch, Vijay மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவிற்கு ரசிகர்கள் யாரும் வரவேண்டாம் என்று நடிகர் விஜய் வேண்டுகோள் வைத்துள்ளதாக தகவல் பரவி வருகிறது.

ரசிகர்கள் அடி வாங்குவதை தன்னால் பார்க்க முடியாது என்ற நோக்கத்தில் ரசிகர்கள் யாரும் இசை வெளியீட்டு விழாவிற்கு வர வேண்டாம் என்று விஜய் கூறியுள்ளதாக தகவல் வந்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது. ‘

இந்த நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து அவ்வப்போது தகவல் வந்து கொண்டே வருகிறது.

Master Audio Launch மாஸ்டர் இசை வெளியீடு

அதன்படி, சென்னையில் இசை வெளியீட்டு விழாவை நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும், ஆதலால், கோயம்புத்தூரில் இசை வெளியீட்டு விழா நடக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

எனினும், இந்த மாதம் கண்டிப்பாக (Master Audio Launch) இசை வெளியீட்டு விழா நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, மாஸ்டர் டிரைலர், மாஸ்டர் இரண்டாவது சிங்கிள் டிராக் என்று அடுத்தடுத்து அப்டேட் வர இருக்கிறது.

Master Shooting Wrapped அண்மையில், 129 நாட்கள் படப்பிடிப்பை முடித்த படக்குழுவினர் போஸ்ட் புரோடக்‌ஷன் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், இசை வெளியீட்டு விழாவிற்கு ரசிகர்கள் யாரும் வர வேண்டாம் என்று விஜய் தெரிவித்துள்ளதாக தகவல் வந்துள்ளது.

இசை வெளியீட்டு விழாவில் தன்னை பார்க்க வரும் ரசிகர்கள் கூட்ட நெரிசல்களில் சிக்கக் கூடாது என்பதற்காகவும், காவல் துறையினரிடம் அடி வாங்கக் கூடாது என்பதற்காகவும் விஜய் இந்த முடிவு எடுத்துள்ளாராம்.

பொதுவாக சென்னையில் இசை வெளியீட்டு விழா நடத்தும் போது விஜய்யைப் பார்ப்பதற்கும், அவர் என்ன பேசுகிறார் என்பதை நேரில் சென்று கேட்பதற்கும் தனி ரசிகர்கள் கூட்டம் உண்டு.

Valimai: வைரலாகும் வலிமை படப்பிடிப்பு புகைப்படங்கள்!

அண்மையில், நடந்த பிகில் இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்களே ஒருவரையொருவர் தாக்கிக்கொள்ளும் நிலை ஏற்பட்டது. இதனை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர்.

இதையடுத்து, பிகில் இசை வெளியீட்டு விழாவிற்காக தாங்கள் பெற்ற ஒரிஜினல் டிக்கெட்டை கையில் வைத்துக்கொண்டு மீடியா முன்பு பேட்டி கொடுத்தனர்.  இது விஜய்க்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

மீண்டும் இது போன்று நடக்கக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கையாகவே விஜய் இந்த முடிவை எடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது.

மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார்.

சேவியர் பிரிட்டோவின் எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து விஜய் தளபதி65 படத்தில் நடிக்க இருக்கிறார்.

SOURCER SIVAKUMAR
Previous articleமகளிர் உலககோப்பை 2020: இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா இந்தியா அணி?
Next articleCryptocurrency Legal In India; கிரிப்டோகரன்சி தடையை நீக்கிய உச்சநீதிமன்றம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here