சஞ்சு சாம்ஸன்; எம்எஸ் தோனியை காப்பி செய்வது இயலாத காரியம். இந்திய கிரிக்கெட் அணியில் வளர்ந்து வரும் வீரரான சஞ்சு, இந்தியாவின் பிரபலமான விக்கெட் கீப்பர் தோனியை பற்றி கூறியுள்ளார்.
எம்எஸ் தோனி வருவதற்கு முன்பும் தற்போது அவர் ஓய்வு பெரும் தருணத்தில் இருக்கும் பொழுதும் இந்திய கிரிக்கெட் அணியில் இருக்கும் ஒரே குறை விக்கெட் கீபிங்க் தான்.
அவர் இந்திய கிரிக்கெட் அணியில் நீண்ட காலமாக அமையாத இடமான விக்கெட் கீபிங்க் பணியை சிறப்பாக அமைத்துக்கொடுத்தார்.
சர்வதேச அளவில் கில்கிறிஸ்ட், மார்க் பவுச்சர் ஆகியோருக்கு பிறகு 800க்கு மேலான கேட்ச் மற்றும் ஸ்டூம்ப்பிங்க் செய்துள்ள ஒரே வீரர் இவர்தான்.
இந்திய கிரிக்கெட்டில் தனக்கென ஒரே பெயரை சச்சின்க்கு பிறகு அதிக பிரபலமான வீரர் இவர் தான். இவரின் இடத்தை பிடிக்க முயன்று வரும் ரிஷப் பண்ட், சஞ்சு ஆகியோர் போட்டி போட்டு வருகின்றனர்.
இதனிடையே தோனி பற்றி இன்ஸ்டாகிரம் பக்கத்தில் பேசிய சஞ்சு சாம்ஸன், அவரை கண்காணித்து அவரின் ஸ்டைலில் நாம் விளையாட முயற்சித்தால் அது இயலாத காரியம்.
அவரின் தனி நுணுக்கங்கள் வித்தியாசமான பேட்டிங் மற்றும் ஸ்டைல் ஆகியவை அவரால் மட்டுமே இயலும் என்று கூறியுள்ளார்.
அவர் ஒரு உணர்ச்சிகரமான மனிதர் அவரை பற்றி நினைக்கும் பொழுதோ அல்லது அவருடன் இருக்கும் பொழுது மிகுந்த உற்சாகத்துடன் இருக்கலாம்.